Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் படங்கள் இல்லாத கீர்த்தி சுரேஷ், சமந்தா

11 ஜூன், 2019 - 15:07 IST
எழுத்தின் அளவு:
No-Tamil-movies-for-Keerthi-Suresh,-Samantha

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு முன்னணி நடிகைகள் என ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும். ஆனால், அவர்களும் தொடர்ச்சியாக தமிழ்ப் படங்களில் நடிப்பதில்லை. ஒவ்வொரு படத்திற்கும் மிகப் பெரும் இடைவெளி விடுகிறார்கள்.

தமிழில் தற்போது அதிகமான படங்களில் நடித்து வரும் நடிகைகளாக நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் தான் இருக்கின்றனர். த்ரிஷா ஏற்கெனவே 'சதுரங்க வேட்டை 2, கர்ஜனை' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். 'பரமபத விளையாட்டு, ராங்கி' ஆகிய படங்களிலும், பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

நயன்தாரா கைவசம் 'விஜய் 63, தர்பார்' ஆகிய படங்கள் உள்ளன. ஹன்சிகா 'மஹா, பார்ட்னர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் 'பாரீஸ் பாரீஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'கோமாளி' படத்தில் நடித்து வருகிறார். தமன்னா, சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஷால் ஜோடியாக நடித்து வருகிறார்.

மற்ற முன்னணி நடிகைகளான கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகியோருக்கு கைவசம் தமிழ்ப் படங்களே இல்லை. கீர்த்தி சுரேஷ் ஹிந்தி, மலையாளத்தில் தலா ஒரு படத்திலும், தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். சமந்தா தெலுங்கில் 96 ரீமேக் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

2018ல் பெரும் வெற்றி பெற்ற 'சர்கார்' படத்திற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. 2018ல் சமந்தா, 'இரும்புத் திரை, சீமராஜா, யு டர்ன்' ஆகிய படங்களில் நடித்தார். 2019ல் ஆறு மாதம் ஆன பின்னும் அவர்கள் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகாதது ஆச்சரியமாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இரு ஆண்டுகளுக்கு செதுக்கப்படுமா தலைவி படம்?இரு ஆண்டுகளுக்கு செதுக்கப்படுமா ... இசையமைப்பாளர் யார் என அறிவிக்காமலே வரும் 'சாஹோ' டீசர் இசையமைப்பாளர் யார் என அறிவிக்காமலே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

11 ஜூன், 2019 - 16:58 Report Abuse
RAMADASS subramani super deluxe
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in