Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொலையுதிர் காலம் படத்தை வெளியிட ஐகோர்ட் தடை

11 ஜூன், 2019 - 13:55 IST
எழுத்தின் அளவு:
Chennai-HC-stay-to-Kolaiyuthir-Kaalam-movie

கமலின் உன்னைப்போல் ஒருவன், அஜித்தின் பில்லா 2 படங்களை இயக்கியவர் சக்ரி டோல்டி. இவர் நயன்தாரா நடிப்பில் இயக்கி உள்ள படம் கொலையுதிர் காலம். இதேப்படம் ஹிந்தியில் காமோஷி என்ற பெயரிலும் உருவாகி உள்ளது. அதில் தமன்னா, பிரபுதேவா முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப்படங்கள் வரும் ஜூன் 14ம் தேதி வெளியாக உள்ளது. ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வரும் நிலையில் இப்படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்து இருக்கிறது. அதன் விபரம் வருமாறு...

பாலாஜி குமார் என்பவர் கொலையுதிர் காலம் படத்திற்கான தலைப்பை ரூ.10 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார். இந்த தலைப்புக்கான உரிமை இவரிடம் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நயன்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம் படம் வெளியாக இருக்கிறது. ஆகவே இந்தப்படத்தின் பெயரில் நயன்தாரா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார் பாலாஜி குமார்.

இந்த வழக்கு இன்று(ஜூன் 11) விசாரணைக்கு வந்தது. காப்புரிமை சட்டத்தின் படி இப்படத்தின் தலைப்பு பாலாஜி குமாருக்கு சொந்தம் ஆகவே, கொலையுதிர்காலம் படத்தை வெளியிட நீதிபதி இடைக்கால தடைவிதித்தார். மேலும் இப்பட தயாரிப்பு நிறுவனம் ஜூன் 21-க்குள் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஏற்கனவே பல பிரச்னைகளை கடந்து வந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்த கொலையுதிர்காலம் படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்திருப்பது அப்படக்குழுவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இடைவேளை இல்லாமல் படமா? தியேட்டர்காரர்கள் எதிர்ப்புஇடைவேளை இல்லாமல் படமா? ... இரு ஆண்டுகளுக்கு செதுக்கப்படுமா தலைவி படம்? இரு ஆண்டுகளுக்கு செதுக்கப்படுமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
11 ஜூன், 2019 - 16:43 Report Abuse
Vasudevan Srinivasan படம் தொடங்கி தொடர்ந்து பத்திரிக்கை மற்றும் இணையதள ஊடகங்களில் செய்திகளும் விளம்பரங்களும் வரும்போது விட்டுவிட்டு இப்போது படம் வெளிவரும் சமயத்தில் இப்படி வழக்கு தொடர்வது 'எதோ எதிர்பார்ப்பை' காட்டுகிறது..
Rate this:
tirou - EVRY,பிரான்ஸ்
11 ஜூன், 2019 - 14:19 Report Abuse
tirou நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த படம் வெளிவரும் பொது இது போன்று கேஸ் போடுவது முறையல்ல என்று நீதி மன்றம் சொல்லாத செயல் நீதி இல்லாதது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in