Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்தடுத்து மூன்று படங்கள்...

11 ஜூன், 2019 - 12:45 IST
எழுத்தின் அளவு:
Libra-production-releasing-3-movies

சுட்டகதை என்ற படத்தை தயாரித்த 'லிப்ரா புரொடக்ஷன்ஸ்' ரவீந்தர் சந்திரசேகரன், அதன் பிறகு பல படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். ஆனால் அவரது தயாரிப்பில் சமீபத்தில் வெளியானது 'நட்புனா என்னானு தெரியுமா' படம் மட்டுமே.

இந்தப்படத்துக்கு பல தடவை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, அந்த தேதிகளில் படத்தை வெளியிட முடியாமல் திணறிப்போனார். பிறகு ஒருவழியாக கடந்த மாதம் அந்தப்படத்தை வெளியிட்டார். 'நட்புனா என்னானு தெரியுமா' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்.

'யோகி' பாபு நடிக்கும் 'கூர்கா', அமலாபால் நடிக்கும் 'அதோ அந்த பறவைப் போல' ஆகிய படங்களின் தமிழக விநியோக உரிமையை வாங்கினார் இவர். அந்த வரிசையில் இப்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'ஐங்கரன்' படமும் இடம் பிடித்துள்ளது. 'ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், மகிமா நம்பியார் நடித்துள்ள 'ஐங்கரன்' படத்தை விஜய்சேதுபதியின் நண்பர் கணேஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடந்து வந்த நிலையில் இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை லிப்ரா புரடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் வாங்கியுள்ளார். இதனால் இவரது வெளியீட்டில் அடுத்தடுத்து இந்த மூன்று படங்களும் வெளியாக இருக்கின்றன.

சொந்தமாக தயாரித்த படம் தோல்வியடைந்த நிலையில் அடுத்தடுத்து மூன்று படங்களை வெளியிடும் இவரது செயல்பாடுகளை படத்துறையினர் ஆச்சர்யத்தோடு கவனித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி... ஜூன் மாத படங்கள் வசூலை அள்ளுமா?உலக கோப்பை கிரிக்கெட் போட்டி... ஜூன் ... ஆக்ஷனில் அசத்தும் சித்தார்த் ஆக்ஷனில் அசத்தும் சித்தார்த்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in