Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜராஜ சோழன் பற்றி விமர்சனம் : பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்

11 ஜூன், 2019 - 11:32 IST
எழுத்தின் அளவு:
Case-file-against-Pa.Ranjith

ரஜினி நடித்த காலா, கபாலி படங்களை இயக்கிய பா.ரஞ்சித், தலித் அரசியல் பேசுபவர், அதுதொடர்பான இயக்கங்களுடன் நெருக்கமான தொடர்புடையவர். நீலம் என்ற அமைப்பை அவரே நடத்தியும் வருகிறார். இந்த நிலையில் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் தலித் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஞ்சித், மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

அவர் பேசியிருப்பதாவது: ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலம் பொற்காலம் என்கிறார்கள். அது தவறு, இருண்ட காலம். தமிழ்நாட்டில் ஜாதிக் கொடுமைகள் அதிகம் இருந்தது தஞ்சை டெல்டா பகுதியில் தான். ராஜ ராஜன் ஆட்சிக் காலத்தில் தான் மிகப்பெரிய சூழ்ச்சி நடத்தப்பட்டு, தலித்துகளின் விளைநிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக் காலத்தில் தான் ஜாதி ஒடுக்கு முறைகள் தொடங்கியது. 400 பெண்களை விலைமாதர்களாக மாற்றி மங்களவிலாஸ் நடத்தியது ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில்தான் என்று பேசினார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து தஞ்சை மாவட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி பாலா, மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

"இயக்குனர் பா.ரஞ்சித், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி உள்ளார். தமிழ் பெண்களை இழிவுபடுத்தி உள்ளார். சாதி பிளவு ஏற்படும் வகையில் அவரது பேச்சு உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என்று தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கிரேஸி மோகன் மறைவு நாடகத்துறையின் கறுப்பு நாள் : பிரபலங்கள் இரங்கல்கிரேஸி மோகன் மறைவு நாடகத்துறையின் ... தர்பார் படப்பிடிப்பில் பேரனுடன் ரஜினி தர்பார் படப்பிடிப்பில் பேரனுடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12 ஜூன், 2019 - 10:44 Report Abuse
Natarajan Ramanathan அடிப்படையில் இவன் ஒரு மகா பொறுக்கி. எனவே இவன் உளறுவதற்கு எல்லாம் பதில் சொல்லி இவனுக்கு அனாவசியமாக முக்கியத்துவம் அளிக்க வேண்டாமே.
Rate this:
11 ஜூன், 2019 - 16:42 Report Abuse
ருத்ரா அரசியல்வாதிகள் சிலர் தலித் என்ற வார்த்தையை பேசுவதே ஓட்டுக்காக மட்டும்தான். நீங்கள் ஒருபடி மேலே போய் தலித் தவிர மற்ற அனைவருமே சரி இல்லாதவர் போல் வரலாறு தெரிந்தது போல் பேசி பிரிவினை ஏற்படுத்துகிறீர்கள் தனி இயக்கத் தலைவன் போல் காட்டிக் கொண்டால் அதற்கு அர்த்தமே வேறு.திறமையின் அடிப்படையில் தான் மனிதன் பார்க்கப் பட வேண்டும்.
Rate this:
armuthu2000@gmai.com - Negombo,இலங்கை
11 ஜூன், 2019 - 15:54 Report Abuse
armuthu2000@gmai.com கேம் ஒப் த்ரோன் பார்க்கவும் மன்னர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியும் -ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்பா ராஞ்சித் கூற்று சரியே -
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
11 ஜூன், 2019 - 12:47 Report Abuse
S Ramkumar இன்னமும் நிறைய எதிர் பார்க்கிறேன் திரு ரஞ்சித் அவர்களே. தமிழக வரலாறே தவறு என்று சொல்லுங்கள். தனி தமிழ் நாடு வேண்டும் என்று சொல்லுங்கள். தலித்தே தமிழன் என்று சொல்லுங்கள். களப்பிரர்கள் தலித்துகள் தான் அதனாலேயே அவர்கள் சரித்திரம் மறைக்கப்பட்டது என்று சொல்லுங்கள். ம்ம்ம்ம்ம்ம். நீயெல்லாம் ஒரு கலைஞன். உனக்கு ஒரு வாசகர் வட்டம்.
Rate this:
P.K. GANESAN - chennai ,இந்தியா
11 ஜூன், 2019 - 11:54 Report Abuse
P.K. GANESAN இறைவனின் படைப்பில் யாரும் தாழ்த்தப்பட்டவர்கள் கிடையாது. ஆனால் சிலரது வாய் தான் அவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் ஆக்கி விடுகிறது. நுணலும் தன் வாயால் கெடும். ரஞ்சித் எந்த ரகம் என்று அவர் வாய் தெரிவிக்கிறது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in