Advertisement

சிறப்புச்செய்திகள்

'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டேக் இட் ஈஸி... லைப் இஸ் கிரேஸி : கிரேஸி மோகனின் தாரக மந்திரம்

10 ஜூன், 2019 - 19:13 IST
எழுத்தின் அளவு:
Crazy-Mohan-no-more

உயிரினங்களில் சிரிக்க கூடிய ஒரே இனம் மனித இனம் மட்டுமே. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள். ஆனால் இன்றைக்கு வாழ்க்கை போராட்டத்தில் எத்தனை பேர் மனம் விட்டு சிரிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் தன்னுடைய வாழ்க்கையை "டேக் இட் ஈஸி... லைப் இஸ் கிரேஸி" என்ற தாராக மந்திரத்துடன் வாழ்ந்தவர் கிரேஸி மோகன்.

வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் நகைச்சுவையாக பார்த்தாலே போதும் வாழ்க்கை சிறப்பாக என்பார் கிரேஸி. அதை அப்படியே கடைபிடித்தும் வந்தார். சினிமாவிலும் அதை பிரதிபலித்தார். கூட்டு குடும்ப வாழ்க்கை முறையில் அதிக நம்பிக்கை உடையவர். ஆன்மிகம் நம்பிக்கையும் உடையவர். ஆபாசம், விரசம் இல்லாத வசனங்கள் இவரின் பலம். கிரேஸி மோகன் என்றாலே வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை, கேள்விக்கு பதில் சொன்னாலும் நகைச்சுவை என நகைச்சுவையே தன் வாழ்க்கையாக வாழ்ந்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது.


"பாரதியார், விவேகானந்தர் போன்றவர்கள் குறைந்த வயதிலேயே இறந்து போய்விட்டார்கள். வந்த வேலை முடிந்துவிட்டால் போக வேண்டியது தான்" என தன் சகோதரர் பாலாஜியிடம் யதார்த்தமாக இன்று(ஜூன் 10) காலை கூறியிருக்கிறார் கிரேஸி மோகன். அவர் எதை நினைத்து அப்படி சொன்னாரோ தெரியவில்லை. ஆனால், அவர் சொன்னது போன்றே நடந்துவிட்டது.பேச்சுவாக்கில் நகைச்சுவையை அடுக்கி கொண்டே போகும் கிரேஸி மோகன் இன்று நம்மோடு இல்லை. முதல்முறை வந்த நெஞ்சுவலியிலேயே அவர் இறந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ரசிகர்களை குலுங்க, குலுங்க சிரிக்க வைத்தவருக்கு நெஞ்சுவலியா என்று கிரேஸி மோகனுடன் பணியாற்றிய பலரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

கிரேஸி மோகன் கைவண்ணத்தில் அமைந்த திரைப்பட நகைச்சுவை வசனங்கள்

01. சின்ன வாத்தியார்
இடிச்சபுளி செல்வராஜ்: என் பொண்ணு செவிடுங்கறத உங்க ப்ரண்ட்டு காதுல போட்டீங்களா
கவுண்டமணி: என்ன டாக்டர் போட்டீங்களா
கிரேஸி மோகன்: ஒரு வாரமா இவன் காதுல போட நான் ட்ரை பண்ணிகிட்டு இருக்கேன் முடியலயேப்பா.
கவுண்டமணி: இவன் காதுல வார்த்தையெல்லாம் போட முடியாது குண்டுதான் போடனும்
கிரேஸி மோகன்: போடு

02. படம்: சதி லீலாவதி
கமல்ஹாசன்: பழனி கண்ணு ஸ்பீட கொற கண்ணு
கோவை சரளா: முடியாது நான் போறேன் கோயம்புத்தூருக்கு
கமல்ஹாசன்: இப்புடி போனா கோயம்புத்தூர் வராது கண்ணு, கும்முடிபூண்டி தான் வரும் கண்ணு என்று கோயம்புத்தூர் ஸ்லாங்கில் பேசுவது போல் அமைத்திருப்பார்.

03.இந்தியன்
இந்தியன் படத்தில் லைசென்ஸ் பெற இவர் நடித்த பார்த்தசாரதி கேரக்டரும், அது தொடர்பான வசனங்களும் நகைச்சுவையில் தெறிக்க வைத்தன.

04.மைக்கேல் மதன காமராஜன்
இந்தப்படத்தில் சாம்பாரில் விழுந்த ஒரு மீனை வைத்து ஐ மீன் வாட் ஐ மீன் என தொடங்கி அந்த காட்சி முழுவதும் மீன் என்ற ஒரு வார்த்தையை வைத்து காமெடி டிராக் பண்ணியிருப்பார்.

05. வசூல்ராஜா எம்பிபிஎஸ்
இந்தப் படத்தில் கமல்ஹாசன் தேர்வில் 98.5 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்ததை கேட்கும் பிரகாஷ்ராஜிடம் "ஹவ் டு ஐ நோ தட் சார்" என அடிக்கடி இவர் சொல்வதையும், அந்த மார்க்கபந்து கேரக்டரரையும் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது.

06. பஞ்சதந்திரம்
இந்தப்படத்தில் கமல், ஜெயராமன், ரமேஷ் அரவிந்த், நாகேஷ் உள்ளிட்டவர்களுடன் பெங்களூரு செல்லும் காட்சியில் போலீஸ் தடுத்து நிறுத்தும்போது வரும் முன்னாடி, பின்னாடி, என்ன இருந்தது கண்ணாடி போன்ற வசனங்கள் மறக்க முடியாதவை.


கிரேஸி மோகன் வசனகர்த்தாவாக பணியாற்றிய திரைப்படங்கள்

1. பொய்க்கால் குதிரை - 1983
2. கதாநாயகன் - 1988
3.அபூர்வ சகோதரர்கள் - 1989
4. மைக்கேல் மதன காமராஜன் - 1990
5. உன்னை சொல்லி குற்றமில்லை - 1990
6. இந்திரன் சந்திரன் - 1990
7. சின்ன மாப்பிள்ளை - 1993
8. மகளிர் மட்டும் - 1994
9. வியட்நாம் காலனி - 1994
10. சின்ன வாத்தியார் - 1995
11. எங்கிருந்தோ வந்தான் - 1995
12. சதி லீலாவதி - 1995
13. அவ்வை சண்முகி - 1996
14. மிஸ்டர் ரோமியோ - 1996
15. ஆஹா - 1997
16. அருணாச்சலம் - 1997
17. ரட்சகன் - 1997
18. சிஷ்யா - 1997
19. தேடினேன் வந்தது - 1997
20. காதலா காதலா - 1998
21. கண்ணோடு காண்பதெல்லாம் - 1999
22. என்றென்றும் காதல் - 1999
23. பூவெல்லாம் கேட்டுப்பார் - 1999
24. தெனாலி - 2000
25. லிட்டில் ஜான் - 2001
26. பஞ்ச தந்திரம் - 2002
27. பம்மல் கே சம்பந்தம் - 2002
28. வசூல்ராஜா எம் பி பி எஸ் - 2004
29. இதயத்திருடன் - 2006
30. ஜெர்ரி - 2006
31. கொல கொலயா முந்திரிக்கா - 2010

32. நான் ஈ - 2012


கிரேஸி மோகன் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் கொடுத்து சென்ற நகைச்சுவை என்றும் அழியாதவை என்பது திண்ணம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் குறித்து வித்யா பாலன் நெகிழ்ச்சிஅஜித் குறித்து வித்யா பாலன் ... கிரேஸி மோகன் மறைவு நாடகத்துறையின் கறுப்பு நாள் : பிரபலங்கள் இரங்கல் கிரேஸி மோகன் மறைவு நாடகத்துறையின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Coffee with Kadhal
  • காபி வித் காதல்
  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Sardar
  • சர்தார்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in