திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை குறைந்தபட்சமாகக் கூட அந்தப் படங்கள் பூர்த்தி செய்யாமல் போனால் பெரும் தோல்வியைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும்.
செல்வராவன், சூர்யா கூட்டணி என்றதுமே 'என்ஜிகே' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்த்து. ஆனால், அரைகுறையான அரசியல் படமாக அமைந்து அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. ஆனால், திரையுலகில் விசாரித்தால் அது வெறும் தோல்விப் படம் மட்டுமல்ல, பெரும் தோல்விப்படம் என்கிறார்கள்.
சூர்யா நடித்து இதற்கு முன் வெளிவந்த 'தானா சேர்ந்த கூட்டம், சி 3' ஆகிய படங்கள் வசூலித்ததை விட 'என்ஜிகே' குறைவாக வசூலித்துள்ளதாம். இந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 30 கோடி வரைதான் வசூல் வந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படத்தை யாரும் வாங்க முன்வராத காரணத்தால் தயாரிப்பாளரே சொந்தமாக வெளியிட்டார். அதனால், மொத்த நஷ்டமும் அவரை கடுமையாக பாதிக்குமாம். சுமார் 50 கோடி வரையில் இந்தப் படம் நஷ்டத்தை தரலாம் என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
தோல்விக்கான காரணம் குறித்து விசாரித்த போது, சூர்யாவிற்கு பெண்கள், குடும்பத்தினர், குழந்தைகள் என ரசிகர்கள் அதிகம். அவர்களுக்கு சூர்யா அரசியல் படம் நடித்ததில் ஆர்வம் இல்லை. அவர்களையும் மனதில் வைத்து சூர்யா கதைகளைத் தேர்வு செய்வதுதான் அவரது எதிர்காலத்திற்கு சிறந்தது என்கிறார்கள்அவர்கள்.