சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
கமலின் நட்பு வட்டாரத்தில் முக்கியமானவர் கிரேஸி மோகன். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த காமெடிகள் என்றும் ரசிக்க கூடியவை. மைக்கேல் மதன காமராசன், அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், காதலா காதலா போன்ற படங்களை பார்த்தாலே போதும் மனிதன் டென்சன் அப்படியே பரந்துவிடும். அந்தளவுக்கு வாழ்க்கையின் யதார்த்தத்தோடு நகைச்சுவையில் புகுந்து விளையாடி இருப்பார் கிரேஸி மோன். இவரின் மறைவு கமலை ரொம்பவே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
கமல் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை : நண்பர் கிரேசி மோகன் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள் லௌகீகம் பழகிக்கிறேன் பேர்வழி என்று அந்த அற்புதமான குணத்தை இழந்திருக்கின்றனர். கிரேசி என்பது அவருக்கு பொருந்தாத பட்டம். அவர் நகைச்சுவை ஞானி.
அவரது திறமைகளை அவர் குறைத்துக் கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாகத் தன்னைக் காட்டிக் கொண்டார் என்பது தான் உண்மை. பல்வேறு தருணங்களில் சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக் கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வெளிக்காட்டியவர். அந்த நல்ல நட்பின் அடையாளமாக, இன்று அவரது சகோதரர் பாலாஜி உடன் இணைந்து நண்பர் மோகனின் நெற்றியில் கைவைத்து பிரியாவிடை கொடுத்தோம்.
நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. ஆள் இருந்தால் தான் நட்பா என்ன? மோகனின் நகைச்சவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும், அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன். அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது. இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள அவர்கள் பழகிக் கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன்.
இவ்வாறு கமல் கூறியிருக்கிறார்.