Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிரேஸி மோகன் மறைவு : நடிகர்கள் இரங்கல்

10 ஜூன், 2019 - 15:17 IST
எழுத்தின் அளவு:
Celebrities-condolence-to-Crazy-mohan

தமிழ் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகர், புகழ்பெற்ற நாடக ஆசிரியர், திரைக்கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா உள்ளிட்ட பல்வேறு தளங்களில் முத்திரை பதித்த கிரேஸி மோகன், மாரடைப்பால் காலமானார். அவருக்கு நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சார்லி : பொய்க்கால் குதிரை படத்தில், மோகனுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். அவர் ஒரு தனித்திறன் கொண்ட நகைச்சுவை நடிகர். ஒரு வாரம் முன்னர் கூட கிரேஸி மோகனுடன் பேசினேன். அவரது இழப்பு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு, என்றார்.

நடிகர் ராதாரவி : அவர் எனது சகோதரரை போன்றவர். அவரது இழப்பு நகைச்சுவை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. நான் இப்போது வெளியூரில் உள்ளேன். சென்னை வந்ததும், அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவேன், என்றார்.

நடிகர் பாண்டு : கதை வசனம், நாடகம் மூலமாக அழிக்க முடியாத தடம் பதித்தவர். நடிகர் கமல்ஹாசனுக்கு கூட அவரை மிகவும் பிடிக்கும். தாங்க முடியாத இழப்பு அது, என்றார்.

நடிகர் தியாகு : அவரது வியட்நாம் காதலி, காதலா காதலா என்ற படங்களில் பணியாற்றி உள்ளேன். கலை உலகிற்கு அவரது இழப்பு பேரிழப்பு. காமெடி காட்சிகளில் மிகவும் அநாயசமாக நடிக்கும் திறன் வாய்ந்தவர். கமலின் பல படங்கள் ஹிட்டாக காரணமே கிரேஸி மோகன் தான். அவரது புகழ் திரையுலகில் நிலைத்து நிற்கும், என்றார்.

நடிகை சச்சு : தனிப்பட்ட முறையிலும் எனக்கு அவர் நல்ல நண்பர், அவரது நகைச்சுவை மறக்க முடியாதவை என்றார்.


எஸ்விசேகர் : எனது நாடக குழுவில் அவர் இயற்றிய, "கிரேஸி தீவ்ஸ் ஆப் பாலவாக்கம்" 1000 முறை மேடையேறி இருக்கிறது. இந்த நாடகத்திற்கு பிறகு தான் ஆர் மோகன், கிரேஸி மோகனாக பிரபலமானார். அசாதரணமான நகைச்சுவை உணர்வு கொண்டவர், கடவுள் பக்தி உடையவர், ஓவியம் வரைவதில் வல்லவர். கூட்டு குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் கடைசி வரை உறுதியாக இருந்தார், அப்படியே வாழ்ந்தார். ஆபாசம் இல்லாமல் வசனம் எழுதகூடியவர். அவரின் மறைவு, பேரிழப்பு. அவரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கிரேஸி மோகன் மறைவு, கடைசி நேர பரபரப்புகிரேஸி மோகன் மறைவு, கடைசி நேர ... கிரேஸி மோகன் நெற்றியில் வைத்து பிரியாவிடை : கமல் உருக்கம் கிரேஸி மோகன் நெற்றியில் வைத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

oce - tokyo,ஜப்பான்
11 ஜூன், 2019 - 19:08 Report Abuse
oce கிரேஸியின் ஆன்மா விண்ணுலக்ம் சென்றடங்கியது. விண்ணுலம் சென்றவர்க்கு அடுத்த பிறவி இல்லை. அதை மோட்ச்ம் என்று சொல்கிறார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in