Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிரேஸி மோகன் மறைவு, கடைசி நேர பரபரப்பு

10 ஜூன், 2019 - 15:10 IST
எழுத்தின் அளவு:
Crazy-Mohans-last-minute

நாடக ஆசிரியர், நடிகர், வசனகர்த்தா என கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கலையுலகில் புகழ் மிக்கவராக விளங்கிய கிரேஸி மோகன் சற்று முன் மாரடைப்பால் காலமானார். அவர் மறைந்துவிட்டார் என நகைச்சுவை நடிகர் சதீஷ் மதியம் 1 மணியளவில் டுவிட்டர் பதிவு ஒன்றைப் போட்டார். அதன்பின் பல திரையுலகப் பிரபலங்களும் அவரது மறைவு குறித்து இரங்கலைத் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

ஆனால், கிரேஸி மோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், ஐசியுவில் அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகின. உடனடியாக சதீஷ் அவருடைய டுவீட்டை டெலிட் செய்துவிட்டார். இருப்பினும் கிரேஸி மோகன் மறைந்துவிட்டார் என்றே பலரும் இரங்கலைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். சிலரோ இது உண்மைதானா என்று கேட்டு விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

பிற்பகல் 2 மணி அளவில்தான் அவர் மரணமடைந்தார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். மருத்துவமனைக்கு நடிகர் கமல்ஹாசன் உடனடியாகச் சென்று இது குறித்து விசாரித்துள்ளார். முதல்முறை வந்த நெஞ்சுவலியிலேயே அவர் இறந்தது. பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ரசிகர்களை குலுங்க,குலுங்க சிரிக்க வைத்தவருக்கு நெஞ்சுவலியா என்று கிரேஸி மோகனுடன் பணியாற்றிய பலரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

தற்போது திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் கிரேஸி மோகன் பற்றியும், அவரது நகைச்சுவை பற்றியும் அவர்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

பல தமிழ்ப் படங்களில் நடித்த கன்னட நடிகரான கிரிஷ் கர்னார்ட் மறைவுச் செய்தி வந்த அதே நாளில் கிரேஸி மோகன் மறைவுச் செய்தியும் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
வசனகர்த்தாவும், நடிகருமான கிரேஸி மோகன் காலமானார்வசனகர்த்தாவும், நடிகருமான கிரேஸி ... கிரேஸி மோகன் மறைவு : நடிகர்கள் இரங்கல் கிரேஸி மோகன் மறைவு : நடிகர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

venkat Iyer - nagai,இந்தியா
13 ஜூன், 2019 - 17:00 Report Abuse
venkat Iyer My brother watched the Crazy Mohan drama,he had escaped the first heart attack.I feel that he is one of the specialized doctor.
Rate this:
S.Subramanian - Chennai,இந்தியா
13 ஜூன், 2019 - 10:42 Report Abuse
S.Subramanian நல்ல நகைச்சுவையாக பேசக்கூடிய மனிதர். நகைச்சுவையில் கொஞ்சம் கூட ஆபாசம் இல்லாமல் யதார்த்தமாக பேசுபவர். தும்மல் பற்றி ஒரு முறை நகைச்சுவையாக ஒரு article எழுதியிருந்தார். ரொம்பவே ரசித்தேன். அந்த கட்டுரை யாரிடமாவது இருந்தால், தெரிவியுங்களேன் please.
Rate this:
INNER VOICE - MUMBAI,இந்தியா
13 ஜூன், 2019 - 00:20 Report Abuse
INNER VOICE நல்ல நடிகர் நல்ல மனிதர் .எல்லோரையும் சிரிக்க வைத்த மனிதர் நம்மை அழ வைத்துவிட்டு பொய் விட்டார் . அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .ஓம் நமோ நாராயணாய
Rate this:
Ambika. K - bangalore,இந்தியா
11 ஜூன், 2019 - 13:51 Report Abuse
Ambika. K கிரிஷ் கர்னாட் வட துருவம் என்றால் கிரேஸி மோகன் தென் துருவம் ஆண்டவனுக்கு எல்லாம் ஒன்றுதான்
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
14 ஜூன், 2019 - 06:59Report Abuse
 nicolethomsonகிரிஷ் கர்னாடுக்கு நகைச்சுவையே வராது...
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
10 ஜூன், 2019 - 23:00 Report Abuse
Allah Daniel ஒரு சகாப்தம் இவரின் காமெடியில் ஒருபோதும் காமநெடி இருந்ததில்லை..
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in