Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வசனகர்த்தாவும், நடிகருமான கிரேஸி மோகன் காலமானார்

10 ஜூன், 2019 - 14:37 IST
எழுத்தின் அளவு:

நடிகரும், பிரபல வசனகர்த்தவுமான கிரேஸி மோகன்(வயது 66) மாரடைப்பால் இன்று(ஜூன் 10) காலமானார். வீட்டில் இருந்த அவருக்கு காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது உயிர் பிரிந்துவிட்டது.

உயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே சிரிக்க கூடியவர்கள். அந்த சிரிப்பை நகைச்சுவையால் திரையுலகிற்கு கொடுத்தவர்கள் ஏராளமான பேர். அவர்களில் முக்கியமானவர் கிரேஸி மோகன். மேடை நாடகங்களிலும், சினிமாவிலும் ஏராளமான நகைச்சுவைகளை அள்ளித் தெளித்தவர்.


சென்னையை சேர்ந்த கிரேஸி 1952ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் மோகன் ரெங்காச்சாரி. மெக்கானிக்கல் பொறியல் பட்டதாரியான இவர், இயல்பிலேயே நகைச்சுவையாக பேசக்கூடியவர். அதுவே அவரை நாடகங்கள் மற்றும் சினிமாவில் எழுத வைத்தது.

கே.பாலசந்தரின் பொய்க்கால் குதிரை படம் மூலம் சினிமாவில் முதன்முதலாக வசனகர்த்தவாக அறிமுகமானார். அதன்பிறகு கமல்ஹாசனின் நெருங்கிய நட்பு கிடைக்க அவரின் பல படங்களுக்கு வசனங்கள் எழுத ஆரம்பித்தார்.

கமலின் பெரும்பாலான நகைச்சுவை படங்களுக்கு இவர் தான் வசனகர்த்தாவாக பணியாற்றினார். “அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், சின்ன மாப்ளே, மகளிர் மட்டும், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, ஆஹா, அருணாச்சலம், காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா” ஆகிய படங்களின் இவரின் நகைச்சுவையை மறக்க முடியாதது.

நடிகராகவும், “அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சின்ன வாத்தியார், இந்தியன், அவ்வை சண்முகி, அருணாச்சலம், காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ்” ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார்.

குறிப்பாக இந்தியன் படத்தில் பார்த்தசாரதி கதாபாத்திரமும், வசூல்ராஜா படத்தில் டாக்டர் மார்கபந்து கதாபாத்திரமும் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்றவை.

தன் சகோதரர் மாது பாலாஜி உடன் இணைந்து பல மேடை நாடகங்களை இயற்றி உள்ளார். குறிப்பாக இவர்களது கூட்டணியில் வெளிவந்த, "மாது பிளஸ் 2, மேரேஜ் மேட் இன் சலூன், அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மாது மிரண்டால், காதலிக்க மட்டும் மாது உண்டு, மதில் மேல் மாது, சாக்லேட் கிருஷ்ணா" போன்றவை மக்களால் பெரிதும் ரசிக்க வைத்தவை.


இவரின் சாக்லேட் கிருஷ்ணா நாடகம் 500 முறை மேடையேறி இருக்கிறது. தமிழகம், இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் 6,500 முறை நாடகங்கள் மேடையேற்றி இருக்கிறது. 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 40 ஆயிரம் வெண்பாக்களை எழுதி உள்ளார்.


1987 ஆம் ஆண்டு சொந்தமாக தொலைக்காட்சி தொடர்களை தயாரிக்கவும் செய்தார். "விடாது சிரிப்பு", ";கிரேஸி டைம்ஸ்", "சிரி கம பதநி" போன்றவை இவருடைய தயாரிப்பில் வெளிவந்த தொடர்களாகும். இவை அனைத்துக்கும் மேல் கிரேஸி மோகன் ஒரு நல்ல ஓவியர் என்பது பலர் அறியாத ஒன்று. 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வசனம் எழுதியும், நடித்தும் இருக்கின்றார். அதில் நடிகர் ரஜினிகாந்துடன் இவர் நடித்திருக்கும் "அருணாச்சலம்" திரைப்படமும் ஒன்று. சோ, மௌலி மற்றும் சாவி இவர்களின் எழுத்து கிரேஸி மோகனை வெகுவாக கவர்ந்தவை. இவை அல்லாமல் பிரிட்டிஷ் எழுத்தாளர் பி ஜி வுட் ஹவுஸ் என்பவரின் எழத்துக்களும் இவரை வெகுவாக கவர்ந்தவை.


சினிமா, இணையதளம், வெப்சீரிஸ் என சினிமாவின் பரிணாம வளர்ச்சி அடுத்தக்கட்டத்திற்கு சென்றாலும் சினிமாவிற்கு முதல் அடித்தளமான நாடகம் இன்றளவும் ஓரளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு இவர் போன்ற கலைஞர்கள் தான் முக்கிய காரணம் என்றால் மிகையல்ல.


இவருக்கு அர்ஜூன் என்ற மகன் இருக்கிறார். அர்ஜுனுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஹரிதா என்பவருடன் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.


கிரேஸியின் உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
வீடு தர மறுத்தார்கள் : டாப்ஸி வருத்தம்வீடு தர மறுத்தார்கள் : டாப்ஸி ... கிரேஸி மோகன் மறைவு, கடைசி நேர பரபரப்பு கிரேஸி மோகன் மறைவு, கடைசி நேர ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

metturaan - TEMA ,கானா
11 ஜூன், 2019 - 10:37 Report Abuse
metturaan கால சூழலில் அடித்துச்செல்ல பட்டாலும் ...மறக்க முடியாத மனிதன் ... வக்கிரம் இல்லா சிரிப்பின் சொந்தக்காரர் ... அன்னார் ஆன்ம சாந்தி அடைய பிரார்த்தனைகள்
Rate this:
துரோகம்வெல்லாது அவரோட மதம் தீவிரவாதியின் மதம் என்று சொல்லிய துரோகி, அவர் மொழி ஆளுமையில் எழுதிய ஸ்மார்ட்டான நகைச்சுவை வசனங்களைப்பேசி தன்னை அறிவுஜீவியாக பிரபலப்படுத்திக்கொண்டவன், அவரது இஷ்டதெய்வம் கிருஷ்ணனை எல்லாபடங்களிலும் இழிவுபடுத்திய நயவஞ்சகன் இன்று இரங்கல் தெரிவிக்க எந்த அருகதையும் இல்லை. ஆம், அவர் குழந்தைமனம் கொண்டிருந்ததால்தான் உன்னை குழந்தைபோல நம்பி ஏமாந்தார். அன்னாரின் ஆன்மா உன்நிழல்படாது வைகுண்டம் ஏக அனைவரும் பிரார்திக்கிறோம்.
Rate this:
10 ஜூன், 2019 - 16:45 Report Abuse
நல்லதைநினை நெத்தியில கையா? சிலுவபோட முயர்ச்சிக்கிறார்போல. மோகன் குடும்பம் உஷாராக இருக்க வேண்டுகிறேன். தயவுசெய்து கமலை வீட்டுபக்கம் சேர்க்காதீர்கள். கோடானுகோடிபேரை மகிழ்வித்த திரு. மோகனின் ஆன்மா வைகுண்டம் ஏகுமென்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
Rate this:
10 ஜூன், 2019 - 19:25Report Abuse
cl saraavarukku.. cinemaavil vaalvu koduthavar...
Rate this:
10 ஜூன், 2019 - 15:02 Report Abuse
ragha vendran Ungal athmaa santhiadaiyattum..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in