‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்தார். சிம்புதேவன் இயக்கினார். ஷங்கர் தயாரித்தார். இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு இதே டீம் அதன் இரண்டாம் பாகத்தை தயாரித்தது. ஆனால் வடிவேலுவுக்கும் இயக்குனர் சிம்பு தேவனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் பாதியில் நின்றது. ஷங்கர் அளித்த புகாரின் பேரில் இந்தப் படத்தை நடித்து முடித்துக் கொடுத்துவிட்டுதான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம், வடிவேலுக்கு ரெட் போட்டு விட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் வடிவேலு அளித்த பேட்டி ஒன்றில் ஷங்கரை கிராபிக்ஸ் டைரக்டர் என்றும், சிம்புத்தேவனை சினிமா தெரியாத சின்ன பையன் என்றும் கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிம்பு தேவனின் உதவியாளரும், இயக்குனருமான மூடர்கூடம் நவீன் தனது டுவிட்டரில் வடிவேலுவை கடுமையாக தாக்கி உள்ளார் அவர் கூறியிருப்பதாவது:
அண்ணன் வடிவேலுவின் நேர்காணல் பார்த்தேன். என் இயக்குனர் சிம்பு தேவனை அவன் இவன் என்ற ஏகவசனங்களில் பேசியிருந்தார். சின்னபையன், சின்ன டைரக்டர், பெருசா வேல தெரியாத டைரக்டர் என்றெல்லாம் பிதற்றியிருந்தார், இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டரை ஏதோ இவரால் தான் புலிகேசி உருவானது போல் உடான்ஸ் விடுகிறார்.
நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள். நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால் நடிகனாக மட்டுமே. உங்களால் காமெடி ட்ராக் ரெடி பண்ண முடியுமே தவிர ஸ்கிர்ப்டை அல்ல. இவ்வளவு அகந்தை கூடாது உங்களால் தான் புலிகேசி ஹிட் ஆனது என்றால் ஏன் அதற்கு பிறகு நீங்கள் பெரும் பட்ஜட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் செல்ப் எடுக்கவில்லை.
23ஆம்புலிகேசி நான் உதவி இயக்குனராக வேலை செய்த முதல் படம். உங்கள் நடிப்பை பார்த்து வியந்ததை போல என் இயக்குனரின் புதிய சிந்தனைகளையும் எழுத்தையும் பார்த்து வியந்து வேலை செய்தேன். நீங்கள் புருடா விடுவது போல் அவர் எடுப்பார் கைபிள்ளை இல்லை. சுயம் கொண்ட இயக்குனர்.
வடிவேலு எனும் மகாகலைஞனை நான் என்றும் வியந்து ரசிப்பேன். அதன் காரணமாக உங்கள் அகந்தையை பொருத்தும் கொள்வேன். ஆனால் நான் பெரிதாக மதிக்கும் இயக்குனர்கள் ஷங்கர், சிம்புதேவன் பற்றி மரியாதை குறைவாக பேசுவதை கண்டிப்பாக ஏற்க முடியாது.
23ம் புலிகேசியின் 2ம் பாகம் வராமல் இருப்பது என்னை போன்ற ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் இழப்பே. அதற்கு காரணம் உங்கள் அகந்தை என்றால் அந்த ஆணவத்தையும் அகந்தையையும் ரசிகனாகவும் , சிம்பு தேவனின் அசிஸ்டண்டாகவும் நான் கண்டிப்பேன்.
இவ்வாறு எழுதியிருக்கிறார்.