ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர் சசி. குறைவான சினிமாக்களே இயக்கினாலும் அத்தனையும் வெற்றிப் படங்கள். கடைசியாக அவர் இயக்கிய பிச்சைக்காரன் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அடுத்து அவர் இயக்கியுள்ள படம் சிவப்பு மஞ்சள் பச்சை.
இதில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ், லிஜிமோள் ஜோஸ், தீபா ராமானுஜம், காஷ்மீரா, பிரேம்குமார் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கிறார், சித்து குமார் என்ற புதுமுகம் இசை அமைத்திருக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் எஸ்.பிள்ளை தயாரித்துள்ளார்.
இது ஒரு டிராபிக் போலீஸ் கான்ஸ்டபிளுக்கும், ஒரு பைக் ரேசருக்குமான மோதல் கதை. இதில் பைக் ரேசராக ஜி.வி.பிரகாசும், கான்ஸ்டபிளாக சித்தார்த்தும் நடித்துள்ளனர். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. வருகிற ஜூலை 5ந் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.