Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபல நடிகர் கிரிஷ் கர்நாட் காலமானார்

10 ஜூன், 2019 - 10:46 IST
எழுத்தின் அளவு:
Actor-Girish-karnad-Pasess-away

பிரபல எழுத்தாளரும் நடிகருமான கிரிஷ் கர்நாட் (வயது 81) காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கிரிஷ் கர்நாட்டின் உயிர் இன்று(ஜூன் 10) காலை பிரிந்தது.

ஏராளமானமா தென்னிந்திய படங்கள் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார் கிரிஷ் கர்நாட். தமிழில் முதன்முறையாக ரஜினி நடித்த, "நான் அடிமை இல்லை" படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு பிற மொழிகளில் நடித்து வந்தவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கரின் "காதலன்" படத்தில் நக்மாவின் தந்தையாக நடித்திருந்தார். தொடர்ந்து "ரட்சகன், மின்சார கனவு, ஹேராம், செல்லமே, நர்த்தகி, மூகமுடி, 24" போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகராக மட்டுமல்லாது திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார். சிறந்த இயக்கம், திரைக்கதை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் தேசிய விருதும், மாநில மற்றும் பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளது.

சினிமா தவிர்த்து சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார் கிரிஷ். இவரின் சினிமா மற்றும் இலக்கிய சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவித்திருக்கிறது.


ஒருநாள் விடுமுறை, 3நாள் துக்க அனுசரிப்பு
கிரிஷ் கர்நாட்டின் மறைவையொட்டி, மாநிலத்தில் மூன்று நாள் துக்க அனுசரிப்பு கடைபிடிக்கப்படுவதாகவும், ஒரு நாள் மாநிலம் தழுவிய விடுமுறை விடப்படுவதாகவும் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கிரிஷின் மரண செய்தி வருத்தம் அளிக்கிறது. சினிமா மற்றும் இலக்கிய துறையில் அவரின் பங்களிப்பு என்றும் நினைவில் இருக்கும். கலாச்சார தூதர் ஒருவரை இழந்துவிட்டோம். அவரின் ஆன்மா சாந்தியடை வேண்டுகிறேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் குமாரசாமி.Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
பாண்டவர் அணியை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ்அணிபாண்டவர் அணியை எதிர்த்து சுவாமி ... நடிகர் சங்க தேர்தலில் அரசியல் இல்லை : நாசர் நடிகர் சங்க தேர்தலில் அரசியல் இல்லை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11 ஜூன், 2019 - 18:13 Report Abuse
J.V. Iyer நல்ல இயக்குனர், நடிகர். இவருக்கு அரசியல் ஏன்? இவருடன் உள்ள நல்ல மதிப்பை கெடுத்துக்கொண்டு விட்டார்.கேட்ட நேரம்.
Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
10 ஜூன், 2019 - 15:17 Report Abuse
narayanan iyer பொதுவாக இன்றைய நாள் இப்படி அமைந்தமைக்கு வருந்துகிறேன் . ஒருபுறம் கிரேசி மோகன் மறுபுறம் கிரிஷ் மறைவு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது .
Rate this:
Nandha -  ( Posted via: Dinamalar Android App )
10 ஜூன், 2019 - 14:34 Report Abuse
Nandha RIP
Rate this:
Ramesh Sargam - Bangalore,இந்தியா
10 ஜூன், 2019 - 14:27 Report Abuse
Ramesh Sargam Today two famous actors in the southern film industry passed away. One is Crazy Mohan and the other is the great Girish Karnad. So sad to learn the demise of great காமெடியன், Crazy Mohan. 66 is not an age to say goodbye to earth. He has lots of wits with him still to deliver. What to do? He (God) decides everything. May his soul rest in peace. Such a great loss to southern film industry. RIP Mohan. RIP Girish Karnad.
Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
10 ஜூன், 2019 - 13:48 Report Abuse
Sathyanarayanan Bhimarao ஒரு நாள் லீவு டு மச். அவருடைய அரைகுறை செக்யூலரிஸம் அவர் பேரைக் கெடுத்தது. கன்னடத்து கமலஹாசன். சாந்தி, சாந்தி, சாந்தி.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in