இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டனர். இவருக்கும் ஒரு மகள் உள்ளார். அந்த மகளை தானே வளர்ப்பதாக கூறி ஆனந்தராஜ், ஐதராபாத்தில் தன் பொறுப்பில் வைத்து வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் ஐதராபாத் சென்ற வனிதா, தன் குழந்தையை சென்னை அழைத்து வந்துவிட்டார். இதனால் ஆனந்தராஜ், வனிதாக தன் மகளை கடத்திச் சென்று விட்டதாக ஐதராபாத் போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து, வனிதா திருவள்ளூர் கோர்ட்டில் தன் மகளை ஆஜர்படுத்தி, மகளை தான் பத்திரமாக வளர்த்து வருவதாகவும், அவளை சட்டப்படி தன்னிடமே ஒப்படைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் பேரில் திருவள்ளூர் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நடிகை வனிதா தனது இரண்டு மகள்களுடனும் கோர்ட்டில் ஆஜர் ஆனார். இருதரப்பு வழக்கறிஞர்களும் வாதாடினார்கள். ஆனால் கோர்ட்டில் ஆனந்தராஜ் ஆஜராகததால் தீர்பை ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனிதா "என் மகளை நானே வளர்ப்பேன். அவள் எனக்குத்தான் சொந்தம், நல்ல தீர்ப்பு கிடைக்கும்" என்றார்.