Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தலைவணங்கி ஏற்கிறேன் - சூர்யா

07 ஜூன், 2019 - 17:05 IST
எழுத்தின் அளவு:
I-accepts-all-reviews-about-NGK-says-Suriya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'என்ஜிகே'. படம் வெளியான முதல் காட்சியிலிருந்தே படம் பற்றி நெகட்டிவ்வான விமர்சனங்கள் மட்டுமே வெளிவந்தன.

படத்தை நெருக்கமாகப் பார்க்க வேண்டும், பொறுமையாகப் பார்க்க வேண்டும் என படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தும் ரசிகர்கள் அதைக் கேட்பதாய் இல்லை. முதல் நாளிலேயே படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் அதிகம் வந்ததால் அது படத்தின் வசூலையும் பாதித்தது.

நேற்றுடன் பெரும்பான்மையான தியேட்டர்களில் 'என்ஜிகே' படத்தைத் தூக்கிவிட்டார்கள். அது தெரிந்துதானோ என்னவோ சூர்யா 'என்ஜிகே' படம் பற்றி அவரது பதிவு ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

அதில், “#NGK திரைப்படம் குறித்த அத்தனை கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்ட கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. கத்துக்கறேன்தலைவரே” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 'என்ஜிகே' படம் ஏழு நாட்களில் 100 கோடி வசூலை அள்ளியதாக சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். கோலிவுட்டில் விசாரித்தவரையில் படம் சுமார் 50 கோடி வரை நஷ்டத்தைத் தரும் என்றே தெரிவிக்கிறார்கள். தயாரிப்பாளரைப் பொறுத்தவரையில் சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை உள்ளிட்ட சில உரிமைகளுடன் தப்பித்திருப்பார். படத்தை வாங்கியவர்களுக்குப் பெரும் நஷ்டம் வரும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சூரரைப்போற்று படத்தில் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர்சூரரைப்போற்று படத்தில் ஹாலிவுட் ... இந்திய கிரிக்கெட் அணிக்காக பாடல் வெளியிட்ட ஜிவி பிரகாஷ் இந்திய கிரிக்கெட் அணிக்காக பாடல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

08 ஜூன், 2019 - 08:58 Report Abuse
ஸ்மார்ட்டன் கோ பேக் டு கௌதம் மேனன் சூர்யா .... இல்ல மகிழ்திருமேனி சாந்தகுமார்
Rate this:
08 ஜூன், 2019 - 07:15 Report Abuse
Elangovan good movie
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
07 ஜூன், 2019 - 20:10 Report Abuse
Allah Daniel எப்பா என்ன பில்டப்பு..ஏதோ சாதிச்ச மாதிரி..”தலை வணங்கி” ஏற்கராரா..ஒரு நல்ல படம் நடிக்க முடியல அதுக்குள்ள அம்பல பாரு...
Rate this:
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
07 ஜூன், 2019 - 18:46 Report Abuse
TAMILAN எல்லா கதாபாத்திரங்களும் நன்றாகவே நடித்திருக்கின்றார்கள் கதையும் நன்றாகத்தான் நகர்த்தப்பட்டிருக்கின்றது. .இது திட்டமிட்டு செய்யப்படும் வதந்தி. உண்மையில் மக்களுக்காக போராடும் சூர்யாவே தமிழகத்தின் சூப்பர்ஸ்டார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in