Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜப்பான நாவலின் தழுவல் 'கொலைகாரன்'

07 ஜூன், 2019 - 16:03 IST
எழுத்தின் அளவு:
Kolaigaran-based-on-Japanese-nover

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், அர்ஜுன், விஜய் ஆண்டனி, அஷிமா நர்வால் மற்றும் பலர் நடித்து இன்று வெளிவந்துள்ள படம் 'கொலைகாரன்'. ஒரு பரபரப்பான த்ரில்லர் ஆக இப்படம் இருப்பதாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். ரசிக்கும் படமாக இருப்பதாக விமர்சகர்களும் படத்தைப் பற்றிப் பாராட்டி வருகிறார்கள்.

இதனிடையே, இப்படம் ஜப்பான் நாவலின் தளர்வான தழுவல் என படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் தெரிவித்துள்ளார். கீகோ ஹிகாஷினோ எழுதிய 'தி டிவோஷன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ்' என்ற நாவலின் தளர்வான தழுவல் என இப்படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கார்டை சேர்த்திருந்தார்களாம். ஆனால், அது பிரின்ட்டில் இடம் பெறாமல் போய்விட்டது. ஒரு பிலிம் மேக்கராக அதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும் என இயக்குனர் ஆண்ட்ரூ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜீது ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன், கவுதமி நடித்து 2015ல் வெளிவந்த 'பாபநாசம்' படத்தின் கதையும் அந்த நாவலிலிருந்து உருவப்பட்ட கதைதான் என்று ஏற்கெனவே பலரும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், 'பாபாநாசம், கொலைகாரன்' இரண்டு படங்களின் கதைக்களமும், பின்னணியும் வேறு வேறு. செய்த ஒரு கொலையை சம்பந்தப்பட்டவர்கள் புத்திசாலித்தனமாக மறைப்பதுதான் இரண்டு படங்களுக்கும் பொதுவான விஷயம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூரரைப் போற்று முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுசூரரைப் போற்று முதற்கட்ட ... சம்பளத்தை உயர்த்திய பூஜா ஹெக்டே சம்பளத்தை உயர்த்திய பூஜா ஹெக்டே

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in