பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? | ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் |
அதர்வா நடிக்க, சாம் ஆண்டன் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன் வெளியான படம் 100. இந்தப்படத்தை வைத்து பலபேரிடம் தயாரிப்பாளர் கடன் வாங்கியதால் கடைசிநேரத்தில் படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. பிறகு ஒருவழியாக பஞ்சாயத்து முடிந்து அடுத்தநாள்தான் 100 படம் திரைக்கு வந்தது.
படத்துக்கு ஓரளவு பாசிட்டிவ்வான டாக் இருந்தும், படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. இதையடுத்து, சாம் ஆண்டன் 'யோகி' பாபுவை கதையின் நாயகனாக வைத்து இயக்கும் 'கூர்கா' படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்த படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை 'லிப்ரா புரொடக்ஷன்ஸ்' வாங்கியுள்ளது.
யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படம் 'தர்மபிரபு'. இந்த படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. 'கூர்கா', 'தர்மபிரபு' ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வருவதால் ஏதோ ஒரு படம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக விநியோகஸ்தர்கள் சொல்கிறார்கள். சம்மந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்களோ தங்களுடைய படம்தான் முதலில் வெளியாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கின்றனர்.