Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நான் இந்தியாவின் பிரதமர் ஆவேன்: ப்ரியங்கா சோப்ரா

06 ஜூன், 2019 - 13:17 IST
எழுத்தின் அளவு:
I-will-become-Indias-PM-says-Priyanka-chopra

நானும், எனது கணவரும் மாற்றத்தை விரும்புகிறவர்கள். அந்த மாற்றம் இந்திய அரசியலிலும், உலக அரசியலிலும் வர வேண்டும் என நினைக்கிறோம். அப்படி மாற்றம் வரும்போது, நான் இந்திய பிரதமராகவும்; என்னுடைய கணவர் நிக் ஜோனஸ், அமெரிக்க அதிபராகவும் வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படியொரு அரிய கருத்தைச் சொல்லியிருப்பவர் வேறு யாருமல்ல - பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராதான்.

தமிழில் நடிகர் விஜய்யுடன் தமிழன் என்ற படத்தில் நடித்து, நடிகையாக அறிமுகம் ஆனார் ப்ரியங்கா சோப்ரா. சினிமாவில், இப்போது வெற்றிகரமான நடிகையாக இருக்கிறார். இவர் சினிமா தவிர, கல்வி, ஆரோக்கியம், பெண்கள் உரிமை என, சமூக விழிப்புணர்வு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்து வருகிறார்.

ஆங்கில தொலைக்காட்சித் தொடர்களில் தலை காட்டி வரும் ப்ரியங்கா சோப்ராவுக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வந்துள்ளன. இந்நிலையில், அமெரிக்கப் பாப் பாடகர் நிக் ஜோனசை வெகுகாலம் காதலித்து வந்தவர், சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன், அவர், லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு பரபரப்பாக பேட்டி அளித்திருக்கிறார். அதில்தான், அவர் தனக்கும் தன்னுடைய கணவர் நிக் ஜோனசுக்கும் அரசியல் ஆர்வம் இருப்பதை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

அந்தப்பேட்டியில் ப்ரியங்கா சோப்ரா கூறியிருப்பதாவது : எதிர்காலத்தில் அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழவிருக்கிறது. நானும் என்னுடைய கணவரும் அரசியல் ஆர்வம் மிக்கவர்கள். மாற்றத்தையும் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருப்பவர்கள். மாற்றங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு, எப்போதும் இருவருக்கும் இருக்கும். என்னுடைய கணிப்புப் படி, நானும், அவரும் விரைவில் தீவிர அரசியலில் இறங்குவோம்.

நான், எதிர்காலத்தில், இந்தியாவின் பிரதமர் ஆவேன்; அவர், அமெரிக்க அதிபர் ஆவார். இது உறுதி. அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எங்கள் இருவருக்கும் பெரிய ஆர்வம் உண்டு. என்றாலும், அதில் நேரடியாக தலையிட யோசித்துக் கொண்டிருந்தோம். இனிமேலும் அப்படிப் பொறுமையாக இருக்க முடியாது.

அரசியலில் விரைவில் மாற்றத்தை ஏற்படுத்தியாக வேண்டும். எந்த விஷயத்தையும் திடமாக எண்ணினால், நடக்காது என்பதே இல்லை; கட்டாயம் நடக்கும். அல்லது நடத்திக் காட்ட வேண்டும். நான் இந்திய அளவிலும், எனது கணவர் உலக அளவில் தலைச்சிறந்த அரசியல் தலைவர்களாக வருவோம். இதில் மாற்றம் இல்லை.

இவ்வாறு அவர் பேட்டியில் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
பழம்பெரும் பாலிவுட் நடிகர் மரணம்பழம்பெரும் பாலிவுட் நடிகர் மரணம் பிரியங்காவை கும்மியடித்த 'நெட்டிசன்'கள்! பிரியங்காவை கும்மியடித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

R.Varadarajan - Chennai,இந்தியா
07 ஜூன், 2019 - 18:44 Report Abuse
R.Varadarajan கமாலுக்கு தங்கை இவள் அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு ?
Rate this:
07 ஜூன், 2019 - 13:31 Report Abuse
மதுவந்தி இந்த (கனவுப்)பிரதமரை கைகாட்டப் போவது ராகுல் ஜியை கை காட்டியவரா.
Rate this:
truth tofday - india,இந்தியா
07 ஜூன், 2019 - 09:04 Report Abuse
truth tofday இவர் சொல்வது உண்மையாகலாம்
Rate this:
Jegan Nicholas - Tirunelveli,இந்தியா
07 ஜூன், 2019 - 05:30 Report Abuse
Jegan Nicholas எந்த படத்துலனு சொல்லு தாயி ?
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
06 ஜூன், 2019 - 16:37 Report Abuse
Endrum Indian சொல்வது மிகவும் சரி அதாவது விவாகரத்து ஆயி இவள் இங்கே வந்து விடுவாள், அவன் அமெரிக்கா சென்று விடுவான் என்பதை யாரும் இந்த அளவு பூடகமாக சொல்லமுடியாது .
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in