'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள படம் கூர்கா. எலீசா, ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், பிரதீப் ராவத் உள்ளபட பலர் நடித்துள்ளனர். ராஜ் ஆர்யன் இசை அமைத்துள்ளார், கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, 100 படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கி உள்ளார்.
இந்தப் படத்தை 4 மங்கிஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சில மாதங்கள் ஆனாலும் படம் வெளிவரவில்லை. சாம் ஆண்டன் இந்தப் படத்திற்கு பிறகு இயக்கிய 100 படம்கூட வெளிவந்து விட்டது. தற்போது படத்திற்கு இருந்த சின்ன சின்ன பிரச்சினைகள் தீர்ந்து வெளியீட்டுக்கு தயாராகி விட்டது.
இதனை நளனும் நந்தினியும், சுட்ட கதை, நட்புன்னா என்னான்னு தெரியுமா படங்களை தயாரித்த லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. "விரைவில் அதிகமான தியேட்டர்களில் படம் வெளியிடப்படும்" என்கிறார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.