Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்கம் தேர்தல் : பாண்டவர் அணி வேட்பாளர்கள் அறிவிப்பு

05 ஜூன், 2019 - 13:27 IST
எழுத்தின் அளவு:
Nadigar-Sangam-election-:-Pandavar-Team-canditates-announced

நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் களமிறங்கும் பாண்டவர் அணியின் 31 பேர் கொண்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது. கடந்த முறை நாசர் தலைமையிலான பாண்டவர் அணி களமிறங்கி வெற்றி பெற்று, மூன்றாண்டுகளை நிறைவு செய்தது. நடிகர் சங்கம் கட்டட பணிகள் காரணமாக 6 மாதம் தேர்தல் போய் இருந்தது.

தற்போது, 2019-22க்கான தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி, சென்னை, அடையாறு ஜானகி - எம்.ஜி.ஆர்., கல்லூரியில் நடக்கிறது. தேர்தல் நடத்தும் சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணியே மீண்டும் களமிறங்குகிறது. இந்த அணியில் போட்டியிடும் 31 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு :

தலைவர் :
தலைவர் பதவிக்கும் நாசரே மீண்டும் போட்டியிடுகிறார்.

துணை தலைவர்கள் : இந்த பதவிக்கு கடந்த முறை போட்டியிட்ட கருணாஸ் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை துணை தலைவராக இருந்த பொன்வண்ணன் இம்முறை போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக பூச்சி முருகன் போட்டியிடுகிறார்.

பொதுச் செயலாளர் : இந்த பதவிக்கு மீண்டும் விஷாலே போட்டியிடுகிறார்.

பொருளாளர் :
கார்த்தி மீண்டும் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

செயற்குழு உறுப்பினர்கள் : செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 26 பேர் போட்டியிடுகின்றனர். அதன் விபரம் வருமாறு...

1. ஸ்ரீமன்
2. பசுபதி
3. ரமணா
4. நந்தா
5. தளபதிதினேஷ்
6. சோனியா போஸ்
7. குட்டி பத்மினி
8. கோவை சரளா
9. பிரேம்
10. ராஜேஷ்
11. மனோபாலா
12. ஜெரால்டு
13. காளிமுத்து
14. ரத்னாப்பா
15. M.A.பிரகாஷ்
16. அஜய் ரத்தினம்
17. பிரசன்னா
18. ஜூனியர் பாலய்யா
19. ஹேம சந்திரன்
20. குஷ்பூ
21. லதா
22. நிதின் சத்தியா
23. பருத்திவீரன் சரவணன்
24. ஆதி
25. வாசுதேவன்
26. காந்தி காரைக்குடி

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சீனாவில் 'சேவ்' ஆகுமா 2.0?சீனாவில் 'சேவ்' ஆகுமா 2.0? 'காப்பான்' காப்பார், சூர்யா ரசிகர்கள் நம்பிக்கை 'காப்பான்' காப்பார், சூர்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Indhuindian - Chennai,இந்தியா
05 ஜூன், 2019 - 14:32 Report Abuse
Indhuindian ஒரு ஓட்டுக்கு எவ்வளவு குடுப்பாங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in