Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீனாவில் 'சேவ்' ஆகுமா 2.0?

05 ஜூன், 2019 - 12:53 IST
எழுத்தின் அளவு:
Did-2.0-save-in-China.?

ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியான படம் '2.0'. அப்போதே இந்தப் படத்தை சீனாவில் வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார்கள். ஜுலை 12ம் தேதி சீனாவில் 56000 ஸ்கிரீன்களில் படத்தை வெளியிடப் போவதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.

500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட '2.0' படம் ஹிந்தியில் மட்டுமே பெரிய லாபகரமான வசூலைக் கொடுத்தது. தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் நல்ல லாபமும், சில பகுதிகளில் நஷ்டமும் ஏற்பட்டதாக தெரிவித்தார்கள். மேலும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இப்படம் பெரிய லாபத்தைத் தரவில்லை என்றுதான் கோலிவுட்டில் தெரிவித்தார்கள். சீனாவில் படம் வெளியாகும் போது அங்கு நன்றாக வசூலித்தால் படம் லாபத்தைப் பெற்றுவிடும் என்றார்கள்.

56000 ஸ்கிரீன்கள் என்றால் அங்கு சில நாட்கள் ஓடினாலே போதும் தேவைப்படும் லாபத் தொகையைப் படம் பெற்றுவிடும். சமீபத்தில் வெளியான ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படம் கூட சீனாவில் 100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது.

ரோபோ, கம்ப்யூட்டர், கிராபிக்ஸ் என சயின்ஸ் பிக்ஷன் படமான '2.0' படத்தின் நிலவரத்தை சீன வசூல்தான் 'சேவ்' செய்ய வேண்டும்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
பதவிக்காக மீண்டும் அரசியலுக்கு வரவில்லை : மோகன்பாபுபதவிக்காக மீண்டும் அரசியலுக்கு ... நடிகர் சங்கம் தேர்தல் : பாண்டவர் அணி வேட்பாளர்கள் அறிவிப்பு நடிகர் சங்கம் தேர்தல் : பாண்டவர் அணி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Kasi -  ( Posted via: Dinamalar Android App )
06 ஜூன், 2019 - 06:43 Report Abuse
Kasi First Tamil film to be translated in Chinese.. Proud moment.. Always Thalaivar Gethu..
Rate this:
Abdul Rahman - Madurai,இந்தியா
05 ஜூன், 2019 - 17:41 Report Abuse
Abdul Rahman இந்த படத்தை பார்த்தல் வாமிட் தான் வரும்.
Rate this:
Loganathan Balakrishnan - Salem,இந்தியா
05 ஜூன், 2019 - 17:17 Report Abuse
Loganathan Balakrishnan நல்லா ஓடினாலும் படம் லாபம் தரவில்லை என்று தான் போட போகிறீர்கள் ரஜினியை பற்றி எதிர் கருத்துக்கள் வருவது தான் வழக்கம்.
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
05 ஜூன், 2019 - 14:48 Report Abuse
Raman Ganesan நேத்து தினமலர்ல 500 கோடி செலவு பண்ணி 850 கோடி வசூல் அப்படினு செய்தி இன்னைக்கு இப்படி நேசமணி காமெடி தோத்துருச்சு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in