மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
சமீபத்தில் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படம் வெளியானது. இந்தப்படத்தில் கதாநாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ரகுல் பிரீத் சிங் இருவரும் நடித்திருந்தனர். படத்தில் பொதுவாக சாய் பல்லவியின் நடிப்பு, ஓவர் ஆக்டிங்காக இருந்ததாகவும், ரகுல் ப்ரீத் சிங்கின் கதாபாத்திர வடிவமைப்பு குழப்பமாக இருந்ததாலும், அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அவர் நடித்து இருந்தார் என்றும் பெரும்பாலான ரசிகர்களும் விமர்சனங்களும் கூறியிருந்தனர்.
ஆனால், சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி இதற்கு அப்படியே உல்டாவாக கருத்துக் கூறி விமர்சித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், “ரகுல் பிரீத் சிங் நடிப்பு மிகவும் மோசம் மற்றும் படத்திற்கு மைனஸ். வாந்தி வருவது போல இருந்தது” என கூறியுள்ளதுடன், “சாய் பல்லவி... என்னுடைய ரவுடி பேபி... நீ கலக்கிவிட்டாய்” என்று கமெண்ட் அடித்துள்ளார் ஸ்ரீரெட்டி.
ரகுல் பிரீத் சிங் மீது ஸ்ரீரெட்டி இவ்வளவு கடுமையாக விமர்சனம் வைக்க காரணம், ஏற்கனவே காஸ்டிங் கவுச் விவகாரத்தில் ஸ்ரீரெட்டி கூறிய கருத்துகளுக்கு எதிராக ரகுல் பிரீத் சிங் கருத்து கூறியதும், அதை தொடர்ந்து இருவருக்குள்ளும் நிலவி வரும் பனிப்போரும் தான் காரணம்.. அதனால் ரகுல் பிரீத் சிங்கை மட்டம் தட்ட இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் ஸ்ரீரெட்டி.