எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது |
தமிழில் 'சுட்ட கதை, நாய்கள் ஜாக்கிரதை, நளனும் நந்தினியும்', தெலுங்கில், 'நேனு லோக்கல், பலே பலே மகாதிவோய், மகானுபாவடு' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் நிசார் ஷபி. இவர் இயக்குனராக அறிமுகமாகும் படம் '7'.
நாளை வெளியாக உள்ள இந்தப் படத்தில் ரகுமான், ஹவிஷ், ரெஜினா, நந்திதா ஸ்வேதா, அனிஷா அம்புரோஸ், த்ரிதா சௌத்ரி, அதிதி ஆர்யா, புஜிதா பொன்னடா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். ஒரே படத்தில் 6 நாயகிகள் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.
இப்படி 6 அழகிய இளம் நாயகிகள் ஒரு படத்தில் நடித்தால் அதுவே படத்திற்கு ஒரு இலவசமான விளம்பரச் செய்தியாகவும் அமையும். ஆனால், இந்தப் படத்திற்கான எந்தவிதமான முன்னோட்ட நிகழ்வுகளும் நடைபெறாமல் படம் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.
ரெஜினா, நந்திதா இருவரும் தமிழ், தெலுங்கில் தெரிந்த முகங்கள்தான். பூஜிதா பொன்னடா தெலுங்கில் வெளிவந்த 'ரங்கஸ்தலம்' படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர். அதிதி ஆர்யா முன்னாள் மிஸ் இந்தியா. ஆனால், இந்தப் படத்திற்காக ஒரு படத்தில் நடித்துள்ள இவர்களில் யாருமே எந்தவிதமான பேட்டியும், படத்தைப் பற்றிய பிரமோஷனையும் செய்யவில்லை. ஒரு சிலர் மட்டும் அவர்களது சமூக வலைத்தளங்களில் படம் பற்றி சில தகவல்களைப் பகிர்வதோடு நின்றுவிட்டார்கள்.
ஒரு பரபரப்பான த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான எந்தவிதமான சத்தமும் இல்லாமல் இந்த செவன் படம் வெளியாகிறது. சமீப காலமாக தங்களது படங்களைப் பற்றிய நிகழ்வுகளுக்கு அந்தப் படங்களில் நடித்திருப்பவர்களே வராமலிருப்பது அதிகமாகி வருகிறது.