Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்ஜிகே - தெலுங்கில் 5 கோடிக்கும் மேல் நஷ்டம்?

04 ஜூன், 2019 - 13:03 IST
எழுத்தின் அளவு:
NGK-:-Loss-in-Telugu

செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்த என்ஜிகே படம் கடந்த வாரம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவந்தது. படம் வெளியான அன்றே எதிர்பார்த்தபடி படம் இல்லை என விமர்சனங்கள் வெளிவந்தன. இருப்பினும் படக்குழுவினர் படத்தை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும், பொறுமையாகப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் தெரிவித்தனர்.

முதல் நாளுக்குப் பிறகு படம் நன்றாக போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகளைப் பரப்பினார்கள். மூன்று நாளில் உலகம் முழுவதும் 60 கோடி வசூலித்தது என்று சிலர் ஆதாரமற்ற செய்திகளைப் பரவ விட்டார்கள். திரையுலகில் விசாரித்ததில் மூன்று நாளில் உலகம் முழுவதுமே 25 கோடி வரைதான் வசூலித்திருக்கும் என்றார்கள். சுமார் 80 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 50 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தைக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் தெலுங்கில் சுமார் 9 கோடி வரை விற்கப்பட்ட படம் 3 கோடி வரையில் மட்டுமே இதுவரை வசூல் செய்துள்ளதாம். அங்கு பெரிய தோல்வியை நோக்கி படம் போய்க் கொண்டிருப்பதாகவும் சுமார் 5 கோடிக்கும் அதிகமான நஷ்டம் அங்கு வரும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

தற்போதைய ஹீரோக்களில் அஜித், விஜய்யைக் காட்டிலும் தெலுங்கில் நல்ல மார்க்கெட்டை வைத்திருந்த சூர்யாவுக்கு என்ஜிகே மேலும் ஒரு தோல்வியைக் கொடுத்துவிட்டது. தொடர்ச்சியாக ஆறாவது தோல்வியைக் கொடுத்துள்ள சூர்யா, இனி, கதைத் தேர்வில் சூர்யா மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என திரையுலகிலேயே பலர் பேசி வருகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அப்பாவாக நடிக்க ராமராஜன் சம்மதிப்பாரா?அப்பாவாக நடிக்க ராமராஜன் ... '7' படத்தில் 6 ஹீரோயின்கள் இருந்தும் யாரும் வரவில்லையா ? '7' படத்தில் 6 ஹீரோயின்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Rajesh -  ( Posted via: Dinamalar Android App )
04 ஜூன், 2019 - 14:11 Report Abuse
Rajesh தெலுங்கில் விஜய் ஓகே அஜித் படம் எங்க ஓடுது தெலுங்கில் விசுவாசம் பிளாப்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in