Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பாவாக நடிக்க ராமராஜன் சம்மதிப்பாரா?

04 ஜூன், 2019 - 12:36 IST
எழுத்தின் அளவு:
Did-Ramarajan-act-as-father-role.?

கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோர் நடித்து 1989-ல் வெளியான படம் 'கரகாட்டக்காரன்'. சின்ன பட்ஜெட்டில் சில லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

சின்ன தொகைக்கு படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பல லட்சம் லாபத்தை அள்ளிக்கொடுத்தது. சுமார் 30 வருடங்களுக்கு முன்பே கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து மிகப்பெரும் சாதனை படைத்தது. கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற பாடல்களும், காமெடியும் காலம் கடந்தும் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கங்கை அமரன் முடிவு செய்துள்ளார் என்ற தகவல் அண்மையில் வெளியானது. அதற்காக 'கரகாட்டக்காரன்' படத்தில் நடித்த அனைவரிடமும் கங்கை அமரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும், 'கரகாட்டக்காரன்' படத்தில் நடித்தவர்களுக்கு குழந்தை பிறந்து, இரண்டு தலைமுறைகளும் இப்போது சந்தித்தால் எப்படி இருக்கும் என்பது போல் இரண்டாம் பாகத்தின் கதை இருக்கும் என்றும் கங்கை அமரன் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

அவர் சொல்வதை வைத்து பார்த்தால் கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ராமராஜனுக்கு அப்பா வேடம். ராமராஜன் அப்பா வேடத்தில் நடிக்க விரும்பமாட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

எல்.கே.ஜி. படத்தில் கூட ஜே.கே.ரித்தீஷ் நடித்த வேடத்தில் நடிக்க முதலில் ராமராஜனையே அணுகினார்களாம். ஆனால் அந்த வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் ராமராஜன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திகேயன் சொன்ன திருத்தம்சிவகார்த்திகேயன் சொன்ன திருத்தம் என்ஜிகே - தெலுங்கில் 5 கோடிக்கும் மேல் நஷ்டம்? என்ஜிகே - தெலுங்கில் 5 கோடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in