Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சந்திரமோகனுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தேசிய விருது

04 ஜூன், 2019 - 10:23 IST
எழுத்தின் அளவு:
SPB-award-to-actor-Chandramohan

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று அவருடைய 74வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

தன் பிறந்தநாளான இன்று பேஸ்புக்கில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். அதோடு கடந்த இரண்டு வருடங்களாக அவர் வழங்கி வரும் எஸ்பி பாலசுப்ரமணியம் தேசிய விருதை இந்த ஆண்டு, தெலுங்கு மற்றும் தமிழ் நடிகரான சந்திரமோகன் மற்றும் மும்பையைச் சேர்ந்த சமூக சேவகர் அபித் ஸ்ருதி ஆகியோருக்கு வழங்கி மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

“கடந்த 53 வருடங்களாக என்னுடைய இசைப்பயணத்திலும், சில சமயங்களில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உடனிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. 2017ம் ஆண்டு முதல் என்னுடைய பிறந்த நாளில் இந்த சமுதாயத்தை மகிழ்வுடன் வைத்திருப்பவர்களுக்கும், உயர்வான விஷயங்களைச் செய்தவர்களுக்கும் என்னுடைய மரியாதையை செய்து வருகிறேன். இது என்னுடைய சொந்த ஊரான நெல்லூரில் நடந்து வருகிறது.

2017ம் ஆண்டு தென்னிந்தியாவின் முதல் பெண் பின்னணிப் பாடகரான ஸ்ரீமதிராவ் பாலசரஸ்வதி அவர்களுக்கும், 2018ம் ஆண்டு ஜானகி அவர்களுக்கும் மரியாதை செலுத்தினேன். இந்த ஆண்டு தெலுங்கு மற்றும் சில தமிழ்ப் படங்களில் நடித்த சந்திரமோகன் அவர்களுக்கு வழங்க உள்ளேன். இந்த விருதை எஸ்பி பாலசுப்ரமணியம் தேசிய விருது பெயரிட்டுள்ளேன்.

அவருடன் மும்பையைச் சேர்ந்த சமூக சேவகர் அபித் ஸ்ருதி என்பவருக்கு வழங்க உள்ளேன். சிறந்த கவிஞர், ஓவியரான கடந்த பல வருடங்களாக தண்ணீர் சிந்தாமல் இருக்க வீட்டுக்கு வீடு பிளம்பருடன் சென்று தண்ணீர் கசிவதைத் தடுக்கும் சேவையைச் செய்து வருகிறார். 84 வயதான அவரையும் பெருமைப்படுத்துகிறேன்.

இன்று என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி. பிறந்தநாள் எனக்கு காலண்டரில் மற்றுமொரு நாள் தான். கடவுள் எனக்கு எவ்வளவு நாள் வாழ அனுமதி கொடுத்துள்ளாரோ, அதன்படி வாழ ஆசைப்படுகிறேன், அவ்வளவு நாளும் உங்களை மகிழ்விப்பேன்,” என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'கொலையுதிர் காலம்' இசையமைப்பாளர் யார் ?, இன்னும் வராத அறிவிப்பு'கொலையுதிர் காலம்' இசையமைப்பாளர் ... ரத்ததானத்தில் சாதனை படைத்தவருக்கு ரஜினி பாராட்டு ரத்ததானத்தில் சாதனை படைத்தவருக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

ஜானகி ஸ்ரீனிவாசன் ஆயர்பாடி மாளிகை குரலால் அங்கேயே அழைத்து சென்று தூங்கும் கண்ணனை கண்முன்னே காட்டிய குரல் தாங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள். விருதளிக்கும் நற் தொண்டு மேலும் சிறக்கட்டும் சகோதரரே.
Rate this:
sagar saritha - Chennai,இந்தியா
04 ஜூன், 2019 - 12:47 Report Abuse
sagar saritha இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் S.P.பி சார்
Rate this:
sathish - melbourne,ஆஸ்திரேலியா
04 ஜூன், 2019 - 11:34 Report Abuse
sathish இவரு பெரிய தேசியவாதி. நாட்டுக்கு ரொம்பவும் பாடு பட்டு, இவரு பேரிலே விருதாம் இவரே உண்டாக்கியது
Rate this:
metturaan - TEMA ,கானா
04 ஜூன், 2019 - 11:07 Report Abuse
metturaan நல்ல செயல் ... பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in