Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மிஸ்டர் லோக்கல்' பற்றி பேச வேண்டாம் - சிவகார்த்திகேயன்

03 ஜூன், 2019 - 17:37 IST
எழுத்தின் அளவு:
I-dont-want-to-talk-about-Mr.Local-says-Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஷபீர் இசையமைப்பில், ரியோ ராஜ், விக்னேஷ் காந்த், ராதாரவி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

இந்த நிகழ்வில் பேசும் போது, 'மிஸ்டர் லோக்கல் தயாரிப்பாளருக்கு வெற்றிப் படம்தான் என்றும், அந்தப் படம் பற்றிப் பேச வேண்டாம்,' என்றும் சிவகார்த்திகேயன் கண் கலங்க பேசினார்.

அந்தப் படத்தில் அவரை சிலபல பஞ்சாயத்துக்களுக்குப் பிறகு தான் நடிக்க வைத்தார்கள். சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படங்களிலேயே மிக மோசமான தோல்வியைத் தழுவிய படமாக அந்தப் படம் அமைந்தது. படம் சரியாகப் போகவில்லை என்பதை சிவகார்த்திகேயனும் இன்றைய பேச்சில் ஒத்துக் கொண்டார். இருப்பினும் தொடர்ந்து ரசிகர்கள் ரசிக்கும்படியான நல்ல படங்களைத்தான் தருவேன் என்றார். அவர் பேசியதிலிருந்து,

“ஜெயிக்கும் போது ஒரு அணியா நிக்கிற மாதிரி தெரியும். தோக்கும் போதுதான் தனியா நிக்கிறோம்கறது புரியும். ஆனா, தோக்கறதோ, தனியா நிக்கிறதோ பிரச்சினையில்லை, நிக்கிறோம்கறது தான் பிரச்சினை, நான் நிக்கிறேன்.

படம் கண்டிப்பா சரியா போகலை, அடுத்தடுத்த படங்கள் இப்படி இருக்காது. உங்க வாழ்க்கைல இருக்கிற கதைகள், உங்களுக்குப் பிடிச்ச கதைகள், நம்ம எல்லோரும் ரசிக்கிற கதைகள், அடுத்தடுத்து வரிசை கட்டி வைத்திருக்கிறேன்.

இது எல்லாமே ஒரு விளையாட்டு தான். ஒரு விளையாட்டில் வந்து அவுட் ஆயிட்டோம், தோத்துட்டோம்னா, அந்த விளையாட்டு தான் முடியும், வாழ்க்கை முடியாது. அப்படித்தான் நான் நம்புறேன்.

நீங்க எல்லாரும் ஆசைப்பட்டு ரசித்து இவ்வளவு பெரிய ஒரு மேடையைக் கொடுத்திருக்கீங்க. இங்க நான் நிக்கிறது, லட்சக்கணக்கான பேரோட வேர்வையில வந்த டிக்கெட்டு காசுல, அவங்க உழைப்பு இருக்கு. அதோட என் வேலை நான் பார்க்கிற உழைப்பும் இருக்கு.

நான் கடந்து வந்த வலி, வேதனை, துரோகம், நட்பு, பாசம், உழைப்பு அதைத்தாண்டி இருக்கிற வெறி, அது என்னை விடாதுன்னு நினைக்கிறேன். நான் ஓடிக்கிட்டே இருக்கேன். இன்னும் சூப்பரான படங்கள் பண்ணுவோம். உங்களை சந்தோஷப்படுத்தணும்.

அடுத்து நான் பிளான் பண்ணியிருக்கிற படங்கள் என் தயாரிப்பாளருக்கு லாபகரமான படங்களாக இருக்கும். கடைசி படம் கூட என் தயாரிப்பளாருக்கு லாபகரமான படம்தான், ஆனா, அதைப் பத்தி பேச வேணாம்.

அடுத்த படம் எல்லாருக்கும் லாபகரமான படமா இருக்கும். அதை மாதிரி முதல் நாள் முதல் ஷோ என் படத்தைப் பார்க்க வரவங்களுக்கு சந்தோஷமா சிரிச்சிட்டு போனா போதும். அவங்க படம் நல்லா இருக்குன்னு சொல்லணும்னு கூட வேணாம். வெளிய போகும் போது நான் ஜெயிக்கணும்னு ஆசைப்படறவங்க, சிரிச்சிட்டு சந்தோஷமா போனாதான் எனக்கும் ரொம்ப சந்தோஷம்.

ஒரு தயாரிப்பாளரா என்னோட விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரங்களுக்கு என்னோட குழுவுக்கு வெற்றிகரமான படமாக இருக்கணும். அதை மட்டும் வச்சிட்டுதான் உழைச்சிட்டே இருக்கேன்.

கடைசியா எல்லாருக்கும் நான் சொல்ல விரும்பறது, ஒண்ணே ஒண்ணுதான். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா,” என லேசாகக் கண் கலங்கி பேசி முடித்தார்.

சிவகார்த்திகேயன் தன் பேச்சில் முடித்த 'ராஜா' யார் என்பது கோலிவுட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமன்னா படத்தில் ஸ்ருதிஹாசன்தமன்னா படத்தில் ஸ்ருதிஹாசன் 'கொலையுதிர் காலம்' இசையமைப்பாளர் யார் ?, இன்னும் வராத அறிவிப்பு 'கொலையுதிர் காலம்' இசையமைப்பாளர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in