லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
தமிழில் சக்ரி டோல்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் கொலையுதிர்காலம். இதேப்படம் ஹிந்தியில் காமோஷி என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. தேவி, தேவி-2 படங்களைத் தொடர்ந்து பிரபுதேவா, தமன்னா ஆகிய இருவரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ஜூன் 14ல் திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள டைட்டில் பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியிருக்கிறார். தெலுங்கில் 2014ல் மகேஷ்பாபு, தமன்னா நடித்த ஆகடு என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு குத்து பாடலில் ஸ்ருதிஹாசன் நடனமாடியிருந்தார். இப்போது தமன்னா நடித்துள்ள காமோஷி படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். ஆக, இரண்டாவது முறையாக தமன்னாவின் படத்தில் இணைந்துள்ளார் ஸ்ருதிஹாசன்.