ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |
ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். தலித் அரசியலை முன்னிறுத்தியே இவரது இரண்டு படங்களுமே இருந்தன. தற்போது ஹிந்தியில் பிர்சா முண்டா என்ற படத்தை இயக்கி வரும் பா.ரஞ்சித், தமிழில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நூலகம் மற்றும் இரவு பாடசாலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பா.ரஞ்சித். அப்போது அவரிடத்தில் செய்தியாளர்கள், காலா படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது இயக்குவீர்கள்? என்றொரு கேள்வியை முன் வைத்தனர்.
அதற்கு பா.ரஞ்சித் பதிலளிக்கையில், காலா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அதுபோன்ற படங்கள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், ஜோதிகா தற்போது நடித்துள்ள ராட்சசி படத்தின் டிரைலர் அம்பேத்கரை மையப்படுத்தி உள்ளது வரவேற்க்கத்தக்கது என்றும் தெரிவித்திருக்கிறார்.