சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' | கடுமையாகும் 2024 பொங்கல் போட்டி | தமிழில் முதல் வெற்றியைப் பெற்ற கங்கனா ரணவத் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார், எமிஜாக்சன் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 29-ந்தேதி வெளியான 2.0 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பல்வேறு உலக நாடுகளிலும் வெளியாகி வரும் இப்படம் ஜூலை 12-ந்தேதி சீனாவில் வெளியாக உள்ளது.
சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள 2.0 படம், பாலிவுட்டில் ரோபோட் 2.0 என்ற பெயரில் வெளியாது. இதே டைட்டீலுடன் தற்போது சீனாவிலும் வெளியாக உள்ளது. எச்.ஒய் என்ற நிறுவனம் இப்படத்தை சீனாவில் பிரமாண்டமாக வெளியிடுகிறது.
சீனாவில் 2.0 படம் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாக உள்ள நிலையில் மொத்தமாக 56 ஆயிரம் திரைகளில் இப்படம் திரையிடப்பட இருக்கிறது. மேலும் ஜூன் 28ம் தேதி சிறப்பு காட்சிகளும் திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.