Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தேவி 2' - கண்டு கொள்ளாத பிரபுதேவா

03 ஜூன், 2019 - 12:08 IST
எழுத்தின் அளவு:
Devi-2-:-Prabhudeva-did-no-promot-movie.?

தமிழ் சினிமாவை விட்டு பல வருடங்களாக விலகியிருந்த பிரபுதேவா, ஹிந்திப் படங்களை இயக்குவதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார். சல்மான் கான், அக்ஷய்குமார், அஜய் தேவகன், ஷாகித் கபூர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கினார். தற்போது சல்மான் கான் நாயகனாக நடிக்கும் 'தபாங் 3' படத்தை இயக்கி வருகிறார்.

ஹிந்தியிலேயே இருந்த பிரபுதேவாவை 'தேவி' படம் மூலம் மீண்டும் நடிக்க அழைத்து வந்தார் இயக்குனர் விஜய். அந்தப் படம் பிரபுதேவாவுக்கு மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரியாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பின் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. அடுத்து அவர் நடித்துள்ள 'யங் மங் சங், பொன்மாணிக்கவேல், தேள்' ஆகிய படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவர உள்ளன.

கடந்த வாரம் பிரபுதேவா நடித்து வெளிவந்த 'தேவி + 2' படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. படத்திற்கான எந்தவிதமான பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பிரபுதேவா கலந்து கொள்ளவில்லை. பட வெளியீடான மே 31ம் தேதிக்கு முன் மே 30ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவதாக அறிவித்து அதையும் ரத்து செய்தார்கள். முதலில் வருவதாகச் சொன்ன பிரபுதேவா, பின்னர் வர மறுத்ததால்தான் அதை ரத்து செய்துவிட்டார்கள் என்கிறார்கள்.

'தேவி' படத்தை அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்திருந்தார் பிரவுதேவா. ஆனால், 'தேவி + 2' படத்தை அவர் தயாரிக்கவில்லை. அவருடைய நண்பர்கள்தான் தயாரித்தார்கள். படம் முடிந்த பின் அவர்களுக்குள் இருந்த பிரச்சினை காரணமாகவே பிரபுதேவா வருவதைத் தவிர்த்துவிட்டார் என்கிறார்கள். கடைசியில் இயக்குனர், தமன்னா, நந்திதா, டிம்பிள் ஆகியோர் மட்டும் சில பத்திரிகையாளர்களை தனிப்பட்ட விதத்தில் சந்தித்து பேட்டி கொடுத்து பிரமோஷனை முடித்துவிட்டார்கள்.

'தேவி' படத்தில் பிரபுதேவாவுக்கு திருப்புமுனை தந்தோமே, 'தேவி 2'வில் அவர் திரும்பிக் கூடப் பார்க்கவில்லையே என பிரபுதேவா மீது இயக்குனர் விஜய் வருத்தத்தில் இருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸ் நடிக்கும் 'சாஹோ' வியாபாரம் ஆரம்பம்பிரபாஸ் நடிக்கும் 'சாஹோ' ... பஞ்சாபில் தமிழுக்குப் பெருமை: ஏ.ஆர்.ரஹ்மான் பஞ்சாபில் தமிழுக்குப் பெருமை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in