மலையாளத்தில் அறிமுகமாகும் மராட்டிய நடிகை | ‛அட்டக்கத்தி' தினேசுக்கு அடுத்த பரீட்சை | எனக்கு கவின் சிபாரிசு செய்தார் : உண்மையை போட்டு உடைத்த அபர்ணா தாஸ் | எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது |
காட்டுப் பய காளி, மத்திய சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெய்வந்த். இவர் அடுத்ததாக, அசால்ட் என்னும் அதிரடி படத்தில் நடித்து வருகிறார்.
அவர், தன்னுடைய காரில் பயணிக்கும்போது, ரோட்டில் வெயிலானாலும், மழையானாலும் நின்று கொண்டு, போக்குவரத்தை சீர் படுத்திக் கொண்டிருக்கும் போக்குவரத்து போலீசாரின் கஷ்ட நிலையை நினைத்துக் கொண்டே செல்வாராம். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தவர், சமீபத்தில், சென்னை, எழும்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, தன்னுடைய ஆவலைச் சொல்லி, அங்கிருந்த போக்குவரத்து போலீசாரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அப்போது, வெயில் அதிகமாக இருப்பதால், பகல் நேரத்தில் பணியில் இருக்கும்போது, வெயில் தாக்கம் கண்ணை பாதிக்கிறது. அதற்கு ஒரு கூலிங் கிளாஸ் வாங்கிக் கொடுத்தால், பயனுள்ளதாக இருக்கும் என போலீசார் கூறியுள்ளனர்.
இதையடுத்து, அந்த போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் ஐம்பது பேருக்கும், நடிகர் ஜெயவந்த் கூலிங் கிளாஸ் வாங்கிக் கொடுத்துள்ளார். அவரது அசால்ட் படத்தில், இந்த காட்சிகள் எங்கேணும் இடம் பெறக் கூடும் என, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.