எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது |
தமிழ்நாட்டைச் சேர்ந்தர் மீரா மிதுன். இவர் மிஸ்.சவுத் இண்டியா பட்டம் வென்றார். அதை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். தற்போது தானே சொந்தமாக அழகிப் போட்டி ஒன்றை நடத்த இருக்கிறார். இந்த போட்டியை நடத்த விடாமல் சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகார் அளித்தார்.
ஆனால் மீரா மிதுன் அழகி போட்டி என்ற பெயரில் பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றி உள்ளார். திருப்பி கேட்டவர்கள் மீது போலீசில் பொய் புகார் கொடுத்துள்ளார். அதனால் அவருக்கு வழங்கிய மிஸ்.சவுத் இண்டியா படத்தை திரும்ப பெறுகிறோம் என்று பட்டத்தை வழங்கி நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில் மீரா மிதுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்தேன். இந்தத் துறை கார்பரேட்கள் கொடிகட்டி பறக்கும் துறை. இதில் பெண்கள் வளர்வது மிகவும் கடினம். தமிழ்ப்பெண்ணான நான் மிகவும் கஷ்டப்பட்டே பல சாதனைகள் செய்தேன். இதில் ஆர்வம் உள்ள தமிழ்ப்பெண்கள் அந்த துன்பங்களை படக்கூடாது எனும் நோக்கில் தான் மிஸ் தமிழ்நாடு திவா எனும் பெயரை முறையாக டிரேட்மார்க் செய்து தமிழ்ப்பெண்களுக்கென பிரத்யேகமான ஒரு போட்டியை நடத்த முற்பட்டேன்.
இந்த துறையின் ஜாம்பவான்கள், கார்பரேட் நிறுவனங்கள் மேலும் என்னுடன் நட்பாக பழகியவர்களும் இப்போட்டியை நடத்தக் கூடாது என கடும் நெருக்கடி தந்தனர். முன்னர் என்னுடன் வேலை பார்த்தவரும் கொச்சி மாடலிங் துறையை சேர்ந்தவருமான அஜித் ரவி, ஜோ மைக்கேல் பிரவீன் ஆகிய இருவரிடமிருந்து தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தது. அதனாலேயே நான் போலிஸீடம் முறையிட்டேன்.
தமிழ்நாடு போலீஸ் துரிதமாக நடவடிக்கை எடுத்தனர். எனக்கு முழு பாதுகாப்பும் மற்றும் வரும் 3ம் தேதி நடைபெற விருக்கும் மிஸ் தமிழ்நாடு போட்டிக்கு முழுபாதுகாப்பு தருவதாக உறுதி அளித்துள்ளனர். இது எனக்கு மிகப்பெரும் பலத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது. இனி தமிழ்ப்பெண்கள் மாடலிங்கில் ஜெயித்துக்காட்டுவார்கள் அதற்காக நான் தொடர்ந்து போராடுவேன் . இவ்வாறு மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.