இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
தொடர்ந்து தோல்விப்படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனியின் இப்போதைய ஒரே நம்பிக்கை கொலைகாரன் படம். அடுத்தவாரம் இந்தப்படம் வெளியாகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, பாபு யோகேஸ்வரன் இயக்கி வரும் தமிழரசன் படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டணி. நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இவர்களுடன் சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட், யோகிபாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார்.
இந்தப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்காக கே.ஜே.யேசுதாஸ் ஒரு பாடலை பாடினார். பல ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜா இசையில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய நிலையில் இப்படத்திற்காக இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் ஒரு மெலடி பாடலைப் பாடியுள்ளார். பழனி பாரதி எழுத வா வா என் மகனே... என்று துவங்கும் தாலாட்டு பாடல் அது.
கடந்த சில ஆண்டுகளாக இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவில்லை. காப்புரிமை பிரச்னையால் இருவருக்கும் சிறு மனஸ்தாபம் நிலவி வந்தது. ஆனால் இந்த கோபம், மனஸ்தாபம் எல்லாம் தற்போது மறைந்து போய்விட்டது.
இசை கலைஞர்களுக்கு உதவும் வகையில் இளையராஜா சென்னையில் நடத்தும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் கலந்து கொண்டு பாடுகிறார். இதற்காக சமீபத்தில் இருவரும் சந்தித்து ஒத்திகையிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சினிமாவிலும் மீண்டும் இளையராஜா இசையில் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.,
தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.