Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'விஸ்வாசம்' வசூலை முறியடித்த 'என்ஜிகே' ?

01 ஜூன், 2019 - 17:24 IST
எழுத்தின் அளவு:
NGK-beats-Viswasam-on-first-day-chennai-collection

சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் நேற்று வெளிவந்த படம் என்ஜிகே. ஒரு சிறந்த அரசியல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படம் 'எல்கேஜி, நோட்டா', செல்வராகவன் இதற்கு முன் இயக்கிய 'புதுப்பேட்டை' படங்களின் சாயலில் இருப்பதாக ரசிகர்கள் குறைகளைத் தெரிவித்தனர். விமர்சனங்களும் படத்திற்கு எதிராகத்தான் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் 'என்ஜிகே' படம் சென்னையில் முதல் நாள் வசூலில் 'விஸ்வாசம்' படத்தை முறியடித்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'என்ஜிகே' படத்தின் முதல் நாள் சென்னை வசூல் 1 கோடிக்கும் சற்று அதிகமாக வசூலித்துள்ளதாம். ஆனால், 'விஸ்வாசம்' படத்தின் முதல் நாள் சென்னை வசூல் 88 லட்சம்தானாம்.

'என்ஜிகே' படத்திற்கு நேற்று அதிகாலை 5 மணி காட்சிகள், 8 மணி காட்சிகள் ஆகியவை சிறப்புக் காட்சிகளாக திரையிடப்பட்டன. சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக பத்து லட்சம் வசூலித்திருந்தால் 'பேட்ட' வசூலைக் கூட முறியடித்திருக்குமாம் என்ஜிகே.

'விஸ்வாசம்' படத்தின் சென்னை வசூலை 'என்ஜிகே' முறியடித்ததற்கு சூர்யா ரசிகர்கள் அவர்களது மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். 'ஏ' சென்டர்களில் சூர்யா என்றுமே டாப்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

என்ஜிகே' படம் முதல் நாளில் 11 கோடி வரை வசூலித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது சூர்யா நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் முதல் நாள் வசூலை விட அதிகம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
உண்மையான அழகு எது.? - காஜல் அகர்வால் விளக்கம்உண்மையான அழகு எது.? - காஜல் அகர்வால் ... படத்திலும் இணைந்த இளையராஜா - எஸ்.பி.பி படத்திலும் இணைந்த இளையராஜா - எஸ்.பி.பி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

s.sakkaravarthi - sivakasi,இந்தியா
08 ஜூன், 2019 - 17:22 Report Abuse
s.sakkaravarthi படம் மொக்க சும்மா அல்லி விடாதீங்க
Rate this:
JMK - Madurai,இந்தியா
04 ஜூன், 2019 - 12:15 Report Abuse
JMK விசுவாசம் ஒரு மொக்க படம் அதை வசூலில் முறியடிச்சா ஒரு சாதனையா ?
Rate this:
Tamilan - California,யூ.எஸ்.ஏ
02 ஜூன், 2019 - 13:38 Report Abuse
Tamilan இது அப்பட்டமான பொய். இந்த படம் அட்டர் ஃப்ளாப். வசூலில் சாதனையெல்லாம் புரியவில்லை. படத்தை ஓட வைக்க போடும் பொய் தகவல். வெள்ளிக்கிழமை கோவையில் பல தியேட்டர்களில் காலி சீட்டுகள் இருந்தது
Rate this:
Sarvaan -  ( Posted via: Dinamalar Android App )
02 ஜூன், 2019 - 11:04 Report Abuse
Sarvaan NGK could be released with a blockbuster like Petta to make this comparison
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in