சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். அவருடைய சமூக வலைத்தளங்களில் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களைப் பதிவிட்டு கவனத்தை ஈர்ப்பவர். மேக்கப் இல்லாத அவருடைய இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்ட ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
மேலும், உண்மையான அழகு பற்றியும் அதில் விளக்கியிருக்கிறார். “மக்கள் இனி அவர்களை கண்டறிவதே கடினம். இதற்கு காரணம் நாம் அழகாய் மயங்கியிருக்கும் உலகத்தில் இருப்பதினாலோ அல்லது சமூக ஊடகங்கள் யாரை எதை முக்கியப்படுத்துகிறது என்பதில் நம்முடைய சுயமரியாதைய தொலைத்ததாலோ இருக்கலாம்.
கோடிக்கணக்கான ரூபாய்களை ஒப்பனை மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்காக செலவு செய்யப்படுகின்றன. அதை வைத்து, நம் உடலை அழகாக்க முயற்சிக்கிறோம். நம்முடைய உருவத்தை நாமே தீர்மானிக்காமல், நாம் யார் என்பதை ஏற்றுக் கொள்ளும் போது தான் நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க முடியும். அழகு சாதனப் பொருட்கள் கொண்டு உடலை அழகாக்கலாம். ஆனால், அது நம் குணத்தையோ, நாம் யார் என்பதையோ கட்டமைக்காது. உண்மையான அழகு நாம் எவ்வளவு அழகாக இருப்பதை என்பதை ஏற்றுக் கொள்வதில்தான் அடங்கியிருக்கிறது. அழகு என்றால் வெள்ளையாகத் தான் இருக்க வேண்டும் என்ற தவறான புரிதலும் எல்லோர் மனதிலும் உள்ளது. அழகு - எல்லா நிறங்களிலும் உண்டு. இதையும் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.” என அற்புதமான ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.
காஜல் அகர்வாலின் இந்த புகைப்படங்களையும், கருத்துக்களையும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.