Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் எனர்ஜி, இளமை

01 ஜூன், 2019 - 16:57 IST
எழுத்தின் அளவு:
Santhosh-sivan-about-Rajini

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் 'தர்பார்' படம் பற்றி தயாரிப்பு நிறுவனம் மட்டும் தான் படப்பிடிப்பு பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. பல புகைப்படங்கள் 'லீக்' ஆனதால் படப்பிடிப்பில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது. இருப்பினும் படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தான் ஏதாவது ஒரு அப்டேட்டைத் தருகிறார்.

சீனியர் ஒளிப்பதிவாளரான அவரது அப்டேட்டுகளை தயாரிப்பு நிறுவனம் தடுக்க முடியாது. இருந்தாலும் அவர் படம் பற்றி அப்டேட் தராமல், ரஜினிகாந்த் பற்றி அப்டேட் தருவதால் அதை கண்டு கொள்ள மாட்டார்கள்.

“ரஜினி சார் அற்புதமானவர். அவருடைய எனர்ஜி தான் அவரை இளமையாக்குகிறது. தளபதி படத்திற்குப் பிறகு அவரை படமாக்குகிறேன்,” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 29ம் தேதி முதல் 'தர்பார்' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பமாகி உள்ளது. 'தளபதி' படத்திற்குப் பின் 28 வருடங்கள் கழித்து ரஜினி நடிக்கும் படம் ஒன்றிற்கு ஒளிப்பதிவு செய்கிறார் சந்தோஷ் சிவன்.

'தளபதி' படம் போன்றே 'தர்பார்' படமும் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கிளாமருக்கு ரெடி என்கிறாரா ராஷி கண்ணா ?கிளாமருக்கு ரெடி என்கிறாரா ராஷி ... உண்மையான அழகு எது.? - காஜல் அகர்வால் விளக்கம் உண்மையான அழகு எது.? - காஜல் அகர்வால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in