Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்ஜிகே., செல்வராகவன் டுவீட் : ரசிகர்கள் கிண்டல்

01 ஜூன், 2019 - 16:20 IST
எழுத்தின் அளவு:
NGK-:-Fans-about-Selvaraghavan-tweet

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்து நேற்று வெளிவந்த படம் 'என்ஜிகே'. ரசிகர்களிடம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இருந்தது. நேற்று அதிகாலை காட்சி, காலை காட்சி என சூர்யாவின் ரசிகர்கள் உட்பட குடும்பத்தினர் பலரும் போய் சென்று படத்தைப் பார்த்தனர். ஆனால், நேர்த்தியில்லாத திரைக்கதை, அழுத்தமில்லாத கதை, முதிர்ச்சியற்ற அரசியல் காட்சிகள் ஆகியவை நிறைந்த இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறியது. படத்திற்கு நெகட்டிவ்வான விமர்சனங்களும் அதிகம் வந்தது.

நேற்று காலையிலேயே, 'வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக் கொண்ட அன்புள்ளங்களே என் வரம்' என படத்தின் தோல்வியைப் பற்றி மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார் சூர்யா. அவருக்கு ரசிகர்கள் ஆதரவு சொல்லி, எப்போதும் அவருக்கு ஆதரவாக இருப்போம் எனத் தெரிவித்தார்கள்.

படத்தின் இயக்குனர் செல்வராகவன் இன்று காலையில் டுவிட்டரில் படம் பற்றிய அவரது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களில் சிலர் யூகித்தது போல் என்ஜிகே கதாபாத்திரம் பல அடுக்குகள், பல ரகசியங்கள் அடங்கியது. படத்தை நீங்கள் நெருக்கமாகப் பார்க்கும் போது அதைக் கண்டுபிடிக்க முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் படத்தில் மறைந்துள்ள ரகசியங்கள் என உண்மையாகவும், கிண்டலாகவும், கேலியாகவும் பல விஷயங்களைப் பட்டியலிட்டு வருகின்றனர். நல்ல இளைஞனாக இருக்கும் சூர்யா அரசியலில் இறங்குவதால் சி.எம். ஆக மட்டும் ஆகவில்லை, சைக்கோவாகவும் மாறுகிறார், அதுதான் படத்தின் கதை என புது விளக்கத்தைக் கொடுத்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொள்ளையடிக்கும் சிம்பன்ஸி : கொரில்லா டிரைலர்கொள்ளையடிக்கும் சிம்பன்ஸி : ... அடுத்தடுத்து 'கைதி' டீசர், 'ராட்சசி' டிரைலர் ஏன் ? அடுத்தடுத்து 'கைதி' டீசர், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in