பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார் | ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு | ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார் | லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!! | சிம்பு 48வது படத்தில் இணையும் கேஜிஎப் இசையமைப்பாளர்! | விபத்தில் இறந்த ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சூர்யா! | சாயாவனம்: மலையாள இயக்குனரின் தமிழ் படம் | 'இறுகப்பற்று' படத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன்: அபர்ணதி | ‛சப்தம்' படப்பிடிப்பு நிறைவு | சின்னத்திரை தொடரில் நடிக்கிறார் சித்தார்த் |
இளையராஜா 75 நிகழ்ச்சிக்குப் பின், என்னுடைய ஏலேலோ கதையை படமாக்கும் முயற்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருப்பதாக இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான், பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய கதை எலேலோ. அது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பப்பட்டு, அவரால் மிகவும் ரசிக்கப்பட்டது. அதை படமாக்கும் முயற்சி அப்போது நடந்தது. ஆனால், அது முடியாமல் போய் விட்டது. இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்குப் பின், அந்த கதையை படமாக்கும் முயற்சி தீவிரமாகி இருப்பதாக உணர்கிறேன்.
ஒரு நாள் என்னை தொடர்பு கொண்ட ரஹ்மான், ஏலேலோ கதையை எனக்கு உடனே அனுப்ப முடியுமா என கேட்டார். கதையை நன்கு மெருகூட்டி வைத்திருந்தேன். அதை உடனே அனுப்பி வைத்தேன். அதை படித்த ரஹ்மான், என்னை மீண்டும் தொடர்பு கொண்டார். நான் ஏற்கனவே படித்த கதையில் இருந்த சில சுவாரஸ்யங்கள், இப்போது அனுப்பியதில் குறைவாக இருக்கிறதே என கேட்டார். முன்பு நான் படித்ததையே எனக்கு அனுப்பி வையுங்கள் என கேட்டார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எத்தனை தூரம் அதை அவர் ரசித்திருந்தால், இத்தனை காலத்துக்குப் பின்னும், அந்த சுவாரஸ்யங்களையெல்லாம் நினைவில் வைத்து, அதையே திருப்பி அனுப்புங்கள் என கேட்க முடியும்? ஆக, ஏலேலோ கதை, எப்படியும் படமாக்கப்படும் என நம்புகிறேன்.
இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.