ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |
கடந்த 2009ல் கபடி போட்டியை பிரதானப்படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் எடுக்கப்பட்டப் படம் வெண்ணிலா கபடி குழு. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது.
மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக் கதையில் இயக்குநர் செல்வசேகரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு 2 திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. கபடி விளையாட்டை பிரமாதப்படுத்தி, பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், வெண்ணிலா கபடி குழு 2 படத்தில் நடித்த நடிகர்கள் விக்ராந்த், அப்புகுட்டி, இயக்குனர் செல்வசேகரன், பிக்சர் பாக்ஸ் அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் செல்வசேகரன் பேசியதாவது: 1987ம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிக விமர்சையாக திருவிழா போல் கூடி, கபடி விளையாட்டு போட்டியை நடத்தி மகிழ்ந்துள்ளனர். அந்த நிகழ்வை அப்படியே நம் கண்முண்னே கொண்டு வந்திருக்கிறது வெண்ணிலா கபடிக் குழு 2 படம். இந்த படம் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும், படத்தின் பல இடங்களில் திருப்பங்கள் இருப்பதால், கடைசி வரை த்ரில்லாகவே படம் செல்லும் என்றார்.
இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.