Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹவுஸ் ஓனர் படத்தில் நடிக்க தடை: லட்சுமி ராமகிருஷ்ணன்

01 ஜூன், 2019 - 12:20 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-Ramakrishnan-about-house-owner

தான் இயக்கும் ஹவுஸ் ஓனர் படத்தில் தன்னை நடிக்கக் கூடாது என தன்னுடைய கணவர் நிபந்தனை விதித்ததாக, இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். தொலைக்காட்சித் தொடர்களில் கவனம் செலுத்தி வந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தொடர்ந்து சினிமாவிலும் நடித்து வந்தார். அவ்வப்போது, சமூக அக்கறையுடன் கூடிய படங்களை எடுத்து, அதை இயக்கியும் வந்தார். அந்த வகையில், தற்போது, ஹவுஸ் ஓனர் என்ற பெயரில் புதிய படம் ஒன்றை எடுத்து, அதை இயக்கி இருக்கிறார்.


சென்னையில், கடந்த 2015ல் பெரும் மழை-வெள்ளம் வந்து, மாநகரையே புரட்டிப் போட்டு, நிலை குலைய செய்தது. அதுதான், ஹவுஸ் ஓனர் படத்தின் கதைக்களம். இந்தப் படத்தில் நடிக்கத்தான், லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவர் ராமகிருஷ்ணன் தடை போட்டதாகக் கூறியிருக்கிறார்.

இந்தப் படத்தில், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லிவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். கோலி சோடா கிஷோர் மற்றும் ஆடுகளம் கிஷோர், ரஞ்சனி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கான படபிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன.

இந்தப் படம் குறித்து தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது: இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு சமூகப் படம். கடந்த 2015ல், சென்னையில் மழை - வெள்ளம் நாசமாக்கியதுதான், படத்தின் கதை. இதை சென்னையில் பிரம்மாணமான செட் அமைத்து படமாக்கினோம். இதற்காக 12 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, அதை வைத்து, மழை - வெள்ள காட்சிகள் அமைத்து படமாக்கினோம்.

இந்தப் படத்தில் நடிகை ரஞ்சனி கேரக்டரில் நான் தான் நடிக்க இருந்தேன். ஆனால், படத்தில் நீ நடிப்பதாக இருந்தால், படத்தை தயாரிக்க மாட்டேன் என, என்னுடைய கணவர் ராமகிருஷ்ணன் கண்டிஷனாக கூறிவிட்டார். படத்தின் இயக்குநராகவும் இருந்து, படத்திலும் நடிக்கவும் செய்யும்போது, இரண்டையும் சரிவர செய்ய முடியாமல் போகலாம் என்பது, கணவரின் எண்ணம். அதனாலேயே, அவர் அப்படிச் சொன்னார். அதை புரிந்து கொண்டு, நடிக்க வேண்டாம் என முடிவெடுத்தேன். அதன் பின்னரே, ரஞ்சனியை அந்த கேரக்டரில் நடிக்க வைத்தோம். அவரும், படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு தேசத்தை கைப்பற்ற ஜூனியரை தூண்டும் ராம் கோபால்!தெலுங்கு தேசத்தை கைப்பற்ற ஜூனியரை ... திருப்பங்கள் நிறைந்த வெண்ணிலா கபடி குழு 2: செல்வசேகரன் திருப்பங்கள் நிறைந்த வெண்ணிலா கபடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sri - Ashburn,VA,யூ.எஸ்.ஏ
23 ஜூலை, 2019 - 11:36 Report Abuse
sri ஏன் இந்த படத்தில் சாமி அறையில் ஜீசஸ் வைத்தீர்கள். தமிழ் நாட்டில அது கட்டாயமா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in