Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கு தேசத்தை கைப்பற்ற ஜூனியரை தூண்டும் ராம் கோபால்!

01 ஜூன், 2019 - 12:14 IST
எழுத்தின் அளவு:
RGV-urges-Jr-NTR-to-take-over-TDP

தனக்கு தனிப்பட்ட முறையில் இடைஞ்சல்கள் கொடுத்தார் என்பதற்காக, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது கடும் கோபம் அடைந்திருக்கிறார், தெலுங்கு பட இயக்குநர் ராம் கோபால் வர்மா. அரசியல் கலந்து எடுக்கப்பட்ட இவரின் லட்சுமி என்டிஆர் படம் ஒன்றை வெளியிட, முதல்வராக இருந்தபோது சந்திரபாபு நாயுடு தடுத்தார். அதனாலேயே அவர் மீது வர்மாவுக்குக் கடும் கோபம். அதுமுதல், நாயுடுவை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைய வேண்டும் என்று, தொடர்ந்து பாடுபட்டு வந்தார் ராம் கோபால் வர்மா. அவரது எண்ணப்படியே நாயுடு தோற்று விட்டார். இருந்தாலும், கடைசி வரை நாயுடுவை விடமாட்டேன் என்று சொல்லி, தொடர்ந்து அவருக்கு எதிராக பாடுபட்டு வருகிறார்.

தினந்தோறும், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அவர் நாயுடுவுக்கு எதிராக கருத்தை பதிவிடுவதை வாடிக்கையாக்கி இருக்கிறார். இந்நிலையில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து, அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் ராம்கோபால் வர்மா கூறியிருப்பதாவது:

சந்திரபாபு நாயுடு போன்ற ஒரு மோசமான அரசியல்வாதியை நான் இதுவரை பார்த்ததே இல்லை. அவர் கையில் என்.டி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சியான தெலுங்கு தேசம் இருக்கிறது. அந்தக் கட்சியை வைத்துக் கொண்டு, அவர் ஆந்திர மக்களையும், தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களையும், ராமாராவின் உண்மை விசுவாசிகளையும் தவிக்க விட்டு விட்டார். அதனால், தெலுங்கு தேசம் கட்சியை நாம் காப்பாற்றியாக வேண்டும். எனவே, அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு, என்.டி.ராமாராவின் பேரனான ஜூனியர் என்.டி.ஆரை கேட்டுக் கொள்கிறேன். இனியும், தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடுவிடம் இருக்குமானால், கட்சி கண்ணுக்கு எதிரே அழிந்து போய் விடும்.

எனவே, தாத்தா என்.டி.ஆரின் புகழ் காக்கப்படவும், அவர் மீது உங்களுக்கு உண்மையான அன்பும், பற்றும் இருக்குமானால், சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து, தெலுங்கு தேசம் கட்சியை, ஜூனியர் என்.டி.ஆர்., கைப்பற்ற வேண்டும். இது ஆந்திர மக்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர்., செய்யும் நன்மை. இப்படி செய்தால்தான், சந்திரபாபு நாயுடு, ஆந்திர மக்களுக்கு செய்த துரோகத்தை அவர்கள் மறப்பர். ஜெய் என்.டி.ஆர்., ஜெய் ஜூனியர் என்.டி.ஆர்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித்திற்கு முதலிடம், விஜய்க்கு நான்காவது இடம் : தமன்னாஅஜித்திற்கு முதலிடம், விஜய்க்கு ... ஹவுஸ் ஓனர் படத்தில் நடிக்க தடை: லட்சுமி ராமகிருஷ்ணன் ஹவுஸ் ஓனர் படத்தில் நடிக்க தடை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in