7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூர்யா - பிரித்விராஜ் சந்திப்பு | யுடியூப் விமர்சகரை திட்டியது ஏன்? : உன்னி முகுந்தன் விளக்கம் | விறுவிறு போஸ்ட் புரொடக்சனில் மம்முட்டி ஜோதிகாவின் காதல் ; தி கோர் | செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்த ரன்பீர் கபூர் |
விஜய் சேதுபதி, மிஷ்கின், பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி நடித்த, சூப்பர் டீலக்ஸ் படம், கடந்த மார்ச் மாதம் வெளியானது. யுவன் இசை அமைத்திருந்தார். தியாகராஜன் குமாரராஜா இயக்கி இருந்தார். படத்தை பற்றி இருவிதமான விமர்சனங்கள் வந்தன. ஒரு தரப்பினர் ஆஹா ஓஹோ என புகழ்ந்தனர். இன்னொரு தரப்பினர் ஆபாசப் படம் என்று இகழ்ந்தனர். வசூலிலும் பெரிய சாதனை படைக்கவில்லை.
இந்த நிலையில் இந்தப்படம் கனடா சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகி உள்ளது. கனடா நாட்டில் மோன்ட்ரா நகரில் நடக்கும் விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்படுகிறது. இதற்காக முயற்சி எடுத்து இந்த பணியை செய்தவர் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்.
படத்தில் பக்ரு நடித்த வில்லன் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் அனுராக்தான் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சினையால் நடிக்கவில்லை. படத்தை முதன் முதலில் பார்த்து விட்டு புகழ்ந்தவர் அனுராக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கனடா திரைப்பட விழாவுக்கு தேர்வானதற்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.