Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

215 அடி உயர கட்அவுட் - சூர்யா தடுக்காதது ஏன்? இணையதளத்தில் விமர்சனம்

01 ஜூன், 2019 - 10:52 IST
எழுத்தின் அளவு:
215-feet-cut-out-:-Why-suriya-not-stop

சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் என்ஜிகே. இதனை செல்வராகவன் இயக்கி உள்ளார். சூர்யாவின் உறவினர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். இந்தப்படம் நேற்று வெளியானது. இதையொட்டி சூர்யாவுக்கு அவரது ரசிகர்கள் திருத்தணியில் 215 அடி உயர கட்அவுட் வைத்திருந்தார்கள். சுமார் 7 லட்சம் செலவில் இந்த கட்அவுட் தயாராகி இருந்தது. 40 தொழிலாளர்கள் ஒரு மாதமாக வேலை செய்து இந்த கட்அவுட்டை உருவாக்கினார்கள்.

திருத்தணி பைபாஸ் சாலையில் வைக்கப்பட்ட இந்த கட்-அவுட்டை சில நாட்களிலேயே அனுமதி பெறாமல் வைக்கப்பட்டது என்று கூறி நகராட்சி அதிகாரிகள் அகற்றி விட்டனர். பின்னர் மீண்டும் அனுமதி பெற்று தற்போது கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் இதுவரை எந்த நடிகருக்கும் இவ்வளவு உயரத்தில் கட்-அவுட் வைக்கவில்லை என்பதால் இது வைரல் ஆனது.

அதே நேரத்தில் இணையதளத்தில் சூர்யாவை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள். ஒரு மாதமாக நடந்து வரும் கட்-அவுட் பணி பற்றி சூர்யாவுக்கு எப்படி தெரியாமல் போயிருக்கும். 7 லட்சத்தை கொண்டு ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி இருக்கலாமே... சூர்யா இதை எப்படி அனுமதித்தார். தடுத்திருக்க வேண்டாமா? ஊருக்கெல்லாம் நியாயம் சொல்லும் சூர்யா, இதில் எப்படி சந்தோஷம் அடைந்தார்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் கட்-அவுட் பற்றி நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் ரசிகர்களுக்கு அன்புக்கு நன்றி தெரிவித்து சூர்யா டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: அன்பே சிவம். அன்பே தவம். வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து, மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கான்ட்ராக்டர் நேசமணி : புதிய படம் தயாராகிறதுகான்ட்ராக்டர் நேசமணி : புதிய படம் ... கனடா திரைப்பட விழாவில் சூப்பர் டீலக்ஸ் கனடா திரைப்பட விழாவில் சூப்பர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in