பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? |
பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு நடித்த கான்ட்ராக்டர் நேசமணி கேரக்டர், கடந்த சில நாட்களாக இணையதளங்களில் டிரண்டாகி உலகம் முழுவதும் பரவியது. வெளிநாட்டுக்காரர் கட்டட நிறுவனம் சுத்தியலுக்கு விளக்கம் கேட்க. அதற்கு ஒரு தமிழ் இளைஞர், இது கான்ட்ராக்டர் நேசமணி தலையில் விழுந்து அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய கதையை சொல்ல, அதனைத்தொடர்ந்து பிரே பார் நேசமணி ஹேஷ்டாக்கை உருவாக்க அது டிரண்டிங் ஆகிவிட்டது.
நேசமணியின் திடீர் புகழால் பனியன் வியாபாரம், தொப்பி வியாபாரம் திடீரென வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் கான்ட்ராக்டர் நேசமணி என்று ஒரு படத்திற்கு தலைப்பிட்டு அதனை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளது ஏ.எஸ்.மீடியா என்ற நிறுவனம். இதில் வடிவேலுவை மீண்டும் நடிக்க வைக்க அந்த நிறுவனம் முயற்சிக்கப் போவதாகவும், அப்படி அவர் ஒப்புக் கொண்டால் அவரது அப்ரண்டிஸ்டுகளாக முன்பு நடித்த சார்லியும், ரமேஷ் கண்ணாவும் நடிப்பார்கள் என்றும், விஜய், சூர்யாவுக்கு பதில் வேறு ஹீரோக்கள் நடிப்பார்கள் என்றும் தெரிகிறது.