'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் சசிகுமார். இவர், கிராமத்து கதையம்சம் உள்ள படங்களில் நிறைய நடித்திருக்கிறார். அதற்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. சமீபத்தில், அவர் பேட்ட படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, அவர் நாடோடிகள் 2, கொம்பு வெச்ச சிங்கமடா, கென்னடி கிளப் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
அந்த படங்களெல்லாம் வரிசையாக ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் 14வது படத்தில் நடிக்கிறார். அதில் அவருக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை மலையாள இயக்குநர் கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.
இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மானஷா ராதாகிருஷ்ணன் நடிக்கிறார். சசிகுமாரோடு இணைந்து தேசிய விருது பெற்ற குரு சோமசுந்தரமும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
படத்தில், இளங்கோ குமாரவேல், மாரிமுத்து, அப்புக் குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமார், சுஜாதா, வித்யா பிரதீப், மஞ்சு பெத்து ரோஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். போலீஸ் அதிகாரியாகிறார் சசிகுமார்
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் சசிகுமார். இவர், கிராமத்து கதையம்சம் உள்ள படங்களில் நிறைய நடித்திருக்கிறார். அதற்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. சமீபத்தில், அவர் பேட்ட படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, அவர் நாடோடிகள் 2, கொம்பு வெச்ச சிங்கமடா, கென்னடி கிளப் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
அந்த படங்களெல்லாம் வரிசையாக ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் 14வது படத்தில் நடிக்கிறார். அதில் அவருக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை மலையாள இயக்குநர் கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.
இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மானஷா ராதாகிருஷ்ணன் நடிக்கிறார். சசிகுமாரோடு இணைந்து தேசிய விருது பெற்ற குரு சோமசுந்தரமும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
படத்தில், இளங்கோ குமாரவேல், மாரிமுத்து, அப்புக் குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமார், சுஜாதா, வித்யா பிரதீப், மஞ்சு பெத்து ரோஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.