ராம்கோபால் வர்மா மீது பணமோசடி புகார் | கேஜிஎப் படத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | மோகன்லால் மீதான யானை தந்தம் வழக்கு: 3 வாரத்தில் விசாரணையை முடிக்க கோர்ட் உத்தரவு | ஆட்டோவில் சென்ற நடிகையிடம் அத்துமீறிய போலீஸ் | ராம் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் | சேகர் படத்தின் தடை நீக்கம் ; மறு ரிலீஸ் தேதி பரிசீலனை | ரிட்டர்ன் டிக்கெட்டை காட்டினால் மட்டுமே ஜாமீன் ; நடிகருக்கு நீதிமன்றம் செக் | விசாரணை தடம் மாறுகிறது : பாதிக்கப்பட்ட நடிகை நீதிமன்றத்தில் மனு | 2022ல் ஹாட்ரிக் வெளியீட்டில் கார்த்தி | போர்கொண்ட சிங்கம் : 'விக்ரம்'-ன் அடுத்த பாடல் வெளியீடு |
கடந்த இரண்டு வருடங்களில் மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார் நடிகர் டொவினோ தாமஸ். கடந்த வருடம் வெளியான தனுஷின் மாரி-2 படத்தில் வித்தியாசமான வில்லனாக மிரட்டிய இவர், தற்போது மலையாள சினிமாவில் தொடர்ந்து கதாநாயனாக நடித்து வருகிறார்.
இந்த வருடம் ஏற்கனவே மோகன்லாலின் 'லூசிபர்' மற்றும் சமீபத்தில் வெளியான 'உயரே' ஆகிய படங்களில் இவர் நடித்திருந்தாலும் அவை கிட்டத்தட்ட சற்று நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோல் என்கிற அளவிலேயே இருந்தன. இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் இவர் நடித்துள்ள 3 படங்கள் வெளியாக இருக்கின்றன
கடந்த வருடம் கேரளாவை உலுக்கிய நிபா வைரஸ் தாக்குதலின் பின்னணியில் உருவாகியுள்ள 'வைரஸ்' என்கிற படத்திலும் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை அடுத்து இவர் நடித்துள்ள 'அண்ட் தி ஆஸ்கார் கோஸ் டு' என்கிற படம் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தேசிய விருது புகழ் இயக்குனர் சலீம் அஹமது இயக்கியுள்ளார்.
இதையடுத்து, அருண் போஸ் என்பவர் இயக்கத்தில் டொவினோ நடித்துள்ள லுக்கா என்கிற படம் வரும் ஜூன் 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் ஜூன் மாதம் முழுதும் டொவினோ தாமஸின் மாதமாக இருக்கும் என்று நன்றாகவே தெரிகிறது.