Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜீவா விடுபட்டது ஏன்?

30 மே, 2019 - 12:49 IST
எழுத்தின் அளவு:
Where-is-Jiiva-in-83-film

கடந்த 1983ல், உலககோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. அதில், இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று, கோப்பையை தட்டி வந்தது. அப்போது, இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்தவர் கபில்தேவ். அப்போதைய இந்திய அணியில், தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்தும் இருந்தார்.

தற்போது, இந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டை வைத்து, இந்தியில் 83 என்ற தலைப்பில் படம் எடுக்கின்றனர். கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தை ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில், கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கேரக்டரில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார். ஸ்ரீகாந்த் வேடத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார். இந்தப் படத்தின் முழு படபிடிப்பும், லண்டனில் நடக்கிறது. இதற்காக, படக்குழு லண்டன் புறப்பட்டுச் சென்றது. முன்னதாக, இந்தப் படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் இணைந்து குரூப் போட்டோ எடுத்து, அதை வெளியிட்டனர்.

அந்தப் புகைப்படத்தில், நடிகர் ஜீவாவை காணவில்லை. இது தொடர்பாக, ரசிகர் ஒருவர், நடிகர் ஜீவாவுக்கு சமூக வலைதளம் மூலம் கேள்வி எழுப்பினார். நண்பரே, உங்களை அந்தப் படத்தில் காணவில்லையே என்று கேட்டிருக்கிறார். அதற்கு நேரடியாக பதில் சொல்லாத நடிகர் ஜீவா, விட்டுட்டு போயிட்டாங்க பாஸ் என்று மட்டும், கிண்டலாக பதில் சொல்லி இருக்கிறார். இது, அவரது ரசிகர்களை குழப்பி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லிப் லாக்கில் சிறந்தவர் விஜய் தேவரகொண்டா : ஸ்வேதாலிப் லாக்கில் சிறந்தவர் விஜய் ... விளம்பரத்தில் நடிக்க மறுத்தது ஏன்?: சாய் பல்லவி விளம்பரத்தில் நடிக்க மறுத்தது ஏன்?: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in