Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோலிவுட்டுக்கு படையெடுக்கும் மிருகங்கள்

30 மே, 2019 - 12:24 IST
எழுத்தின் அளவு:
More-animal-based-movie-in-Tamilcinema

'கிருமி' படத்தை இயக்கிய அனுசரண் முருகையா இயக்கத்தில் கருணாகரன், யோகி பாபு, சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, டி.பி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் நடிக்கும் படம் 'பன்னிக்குட்டி'. 'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை மிக விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

'ஆண்டவன் கட்டளை', 'கிருமி' போன்ற படங்களுக்கு இசை அமைத்த கே என்கிற கிருஷ்ணகுமார் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். யோகி பாபு, கருணாகரன், சிங்கம் புலி என்று ஏராளமான காமெடி நடிகர்கள் நடிப்பில் உருவாகி வரும் 'பன்னிக்குட்டி' முழுக்க முழுக்க ஒரு காமெடி படமாக உருவாகி வருகிறதாம்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மான்ஸ்டர் படத்தில் ஒரு எலி முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றிருந்தது. ஜீவா நடிப்பில் தற்போது உருவாகி வரும் 'கொரில்லா' படத்தில் சிம்பன்ஸி நடித்துள்ளது. விக்ராந்த் நடிக்கும் 'பக்ரீத்' படத்தில் ஒட்டகம் முக்கிய கதாபாத்திரமாக இடம் பெறுகிறது. இந்தப் படங்கள் வரிசையில் 'பன்னிக்குட்டி'யும் இடம்பெற இருக்கிறது. இந்த படங்கள் தவிர ஜீவா நடிக்கும் ஜிப்ஸி படத்தில் ஜீவா கேரக்டருடன் படம் முழுக்க ஒரு குதிரையும் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சமீபகாலமாக தமிழ்ப்படங்களில் விலங்குகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதற்கு என்ன காரணம் தெரியுமா? மிருகங்கள் நடிக்கும் படங்களின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் மிகப்பெரிய விலைக்கு பிசினஸ் ஆகிறது. எந்தளவுக்கு அதிக தொகை கிடைக்கிறது தெரியுமா?

ஜீவா நடித்த கீ படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் 45 லட்சம். அதே ஜீவா கொரில்லா உடன் நடித்த கொரில்லா படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் 2. கோடியே 50 லட்சம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என்.ஜி.கே.வை சொந்தமாக வெளியிடும் தயாரிப்பு நிறுவனம்என்.ஜி.கே.வை சொந்தமாக வெளியிடும் ... லிப் லாக்கில் சிறந்தவர் விஜய் தேவரகொண்டா : ஸ்வேதா லிப் லாக்கில் சிறந்தவர் விஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in