'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் | தெலுங்கில் நஷ்டத்திலிருந்து தப்பிக்கும் 'வாரிசு' | பாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள ஷாரூக்கான் | தலைக்கூத்தல் மூலம் தமிழுக்கு வரும் பெங்காலி நடிகை | வறுமையில் வாடும் இயக்குனர் ‛குடிசை' ஜெயபாரதி | ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் |
இந்த வருடம் மலையாள சினிமாவில் நடிகர்கள் பலரும் தங்களுக்குள் இருக்கும் இயக்குனரை வெளிப்படுத்த துவங்கிய வருடமாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். சமீபத்தில்தான் நடிகர் பிரித்திவிராஜ் இயக்குனராக மாறி மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற ஹிட் படத்தை கொடுத்தார்.
அதே பிரித்திவிராஜை வைத்து தற்போது மலையாள குணச்சித்திர மற்றும் காமெடி நடிகரான கலாபவன் சாஜன் முதன்முறையாக இயக்குனராக மாறி பிரதர்ஸ் டே என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல சமீபத்தில் தான் மோகன்லாலும் தனக்குள் இருக்கும் இயக்குனராகும் ஆசையை வெளிப்படுத்தியதுடன் பாரோஸ் என்கிற படத்தை இந்த வருடமே இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் ஜெயராமும் தானும் விரைவில் இயக்குனராக போவதாகவும், அனைவரும் பாராட்டும்படியான ஒரு படத்தை இயக்குவேன் என்றும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த படம் வழக்கமான ஒரு கமர்ஷியல் படமாக இல்லாமல், மலையாள ரசிகர்கள் பல வருடத்திற்கு தங்களது மனதுக்கு நெருக்கமாக உணரும் ஒரு படமாக அது இருக்கும் என்றும் கூறியுள்ளார்.